5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய செய்தி.. புதிய விதிமுறைகளை கொண்டு வந்த தமிழக அரசு!

New Rules | இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது.

Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய செய்தி.. புதிய விதிமுறைகளை கொண்டு வந்த தமிழக அரசு!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 16 Oct 2024 13:55 PM

புதியதாக திருமணம் ஆனவர்கள் புதியதாக ரேஷன் அட்டை கோரி விண்ணப்பிப்பது வழக்கம். இதேபோல குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் உயிரிழந்து விட்டாலே அவர்களது பெயர்களும் குடும்ப அட்டையில் இருந்தும் நீக்கப்படும். இதற்கு சில ஆவணங்களை ஆதாரமாக வழங்க வேண்டும். இந்த நிலையில் தான், புதியதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது மற்றும் ஏற்கனவே ரேஷன் அட்டையில் இருக்கும் பெயர்களை நீக்குவதற்கான சில விதிமுறைகள் மற்றும் ஆவணங்களை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில், ரேஷன் கார்டு குறித்து அரசு வெளியிட்ட விதிமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : SBI : எஸ்.பி.ஐ வழங்கும் 5 சிறப்பு FD திட்டங்கள்.. வட்டி எவ்வளவு தெரியுமா?.. முழு விவரம் இதோ!

ரேஷன் கார்டு குறித்து வெளியான முக்கிய தகவல்

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. அதன்படி குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் ரேஷன் கார்டு மற்றும் ரேஷன் கடை முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ரேஷன் கார்டு குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?

புதிய குடும்ப அட்டை வழங்குவதில் கால தாம்தம்

தமிழகத்தில் தேர்தல் காரணமாக கடந்த சில நாட்களாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தொடங்கினாலும் அதற்கு கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது மகளிர் உரிமைத் தொகை தான். மகளிர் உரிமைத் தொகை பெற குடும்ப அட்டை அவசியம். இதன் காரணமாக பலர் புதிய குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்து வருகின்றனர். எனவே தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து குடும்ப அட்டை வழங்கும் நோக்கில் புதிய குடும்ப அட்டை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது.

இதையும் படிங்க : Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?

புதிய விதிகளை வெளியிட்ட தமிழ்நாடு அரசு

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு ரேஷன் கார்டு குறித்து பல புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. திருமணமானவர்கள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கும்போது திருமண பத்திரிக்கை, திருமண சான்றிதழ் உள்ளிட்டவை கோரபப்டும். பெரும்பாலும் திருமண பத்திரிக்கை வைத்து புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் நிலை உள்ளது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது குடும்ப அட்டையில் இருந்து ஒருவரின் பெயரை நீக்க வேண்டும் என்றால் திருமண சான்றிதம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல அந்த நபர் உயிரிழந்துவிட்டால் அவரின் இறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக புதிய ரேஷன் கார்டு வழங்குவதில் மேலும் கால தாமதம் ஏற்படால் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Latest News