5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. ரேஷன் பொருட்களில் புது வரவு.. அரசு அசத்தல்!

Ration Products | ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில், ரேஷன் அட்டை பயனர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது.

Ration Card : ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. ரேஷன் பொருட்களில் புது வரவு.. அரசு அசத்தல்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 06 Nov 2024 11:28 AM

ரேஷன் பொருட்களில் அதிரடி மாற்றம் : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் மூலம் ஏராளமான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. இந்நிலையில், ரேஷன் அட்டை பயனர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது.

இதையுக்ம் படிங்க : Ration Shop : 5 ஆம் தேதிக்குள் ரேஷன் பொருட்களை வாங்கிவிடுங்கள்.. இல்லனா சிக்கல்!

ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம்?

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் கேழ்வரகு விநியோகம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நீலகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் இலவழமாக கேழ்வரகு வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அந்த முடிவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் கேழ்வரகு விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவலகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க திட்டம்

இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்கப்படுவதற்கு பதிலாக, தேங்காய் எண்ணெய் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்குவது அரசின் பரிசீலனையில் உள்ளதாக சமீபத்தில் உணவுத் துறை அமைச்சர் சக்ரபாணி ஊடகத்திடம் தெரிவித்தார். இந்நிலையில், முதற்கட்டமாக கோவை, நீலகிரி, கண்யாகுமரி, தென்காசி மாவட்டங்களில் முதற்கட்டமாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கான பரிசீலனையில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 444 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதிலாக அரை லிட்டர் தேங்காய் எண்ணெய்

இந்த நிலையில், தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைக்கு வழங்கப்படும் ஒரு லிட்டர் பாமாயிலுக்கு பதிலாக அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கலாமா என பொதுமக்களிடம் கருத்து கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிபின் மூலம் மக்களின் தேவையை உணர்ந்து தேங்காய் எண்ணெய் வழங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ரேஷன் கடைகளில் தற்போது அரசி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News