Government Scheme : வீடு கட்ட ரூ.3,50,000 தரும் தமிழக அரசு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம் இதோ!
House | பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான், கலைஞர் கனவு திட்டம். இந்த திட்டம் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில், வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.3,50,000 லட்சம் வழங்கப்படுகிறது.
சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பெரும்பாலன மக்களின் ஆசை மற்றும் கனவாக உள்ளது. அவர்களின் கனவனை நினைவாக்க வேண்டும் என்பதற்காக தான் அரசு ஒரு சிறந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டத்தின் பெயர் தான் கலைஞர் கனவு இல்லம் திட்டம். இந்த திட்டத்தில் வறுமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கு வீடு கட்ட ரூ.3,50,000 வரை பணம் உதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களின் கனவு இல்லத்தை கட்ட முடியும். இந்த நிலையில், அரசு செயல்படுத்தி வரும் இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டம் என்றால் என்ன, அதற்கு விண்ணப்பிப்பது எப்படி, அந்த திட்டத்திற்கு யார் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : SBI FD : மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுகக்கான FD.. ரூ.7,14 மற்றும் ரூ.21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
மனிதர்களின் வாழ்வில் அத்தியாவசியமாக உள்ள வீடு
வீடு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. வீடு இருப்பிடமாக மட்டும் அல்லாமல் அது மனிதர்களின் உணர்வுடன் கலந்ததாக உள்ளது. தங்களுக்கான நிலையான இருப்பிடம் இருக்க வேண்டும் என்பதே பலரின் கனவாக உள்ளது. இதற்காக பலர் நீண்ட நாட்களாக பணத்தை சேகரித்து வீடு கட்டுவர். சிலர் கடன் வாங்கியவாது வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுவர். ஆனால் பொருளாதாரத்தில் விளிம்பில் இருக்கும் மக்களால் சொந்த வீடு என்பதை நினைத்து பார்க்கவே முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாகவே, வறுமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்களுக்கு வீடு கட்ட உதவும் வகையில் அரசு இந்த கலைஞ்ர கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
கலைஞர் கனவு திட்டம் என்றால்?
பொதுமக்களின் நலனுக்காக தமிழக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான், கலைஞர் கனவு திட்டம். இந்த திட்டம் வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தில், வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கு வீடு கட்டுவதற்காக ரூ.3,50,000 லட்சம் வழங்கப்படுகிறது. அதன்படி, 2024-25 ஆம் ஆடுக்குள் 1 லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, ரூ.800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டம்.. 7.35% வரை வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்!
திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் என்ன என்ன?
இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற வேண்டும் என்றால் அதற்கு சில தகுதிகள் உள்ளன. அவற்றை பூர்த்தி செய்யாத பயணர்களுக்கு இந்த திட்டத்தின் பலன்கள் கிடைக்காது.
- இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் பயன்பெற ஒருவர் வறுமை கோட்டின் கீழ் இருக்க வேண்டும்.
- இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபருக்கு சொந்த இடத்தில் குடிசை வீடு இருக்க வேண்டும்.
- இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபருக்கு ஏற்கனவே கான்கிரீட் வீடு இருந்தால் திட்டத்தில் பயன்பெற முடியாது.
இதையும் படிங்க : Recurring Deposit : வெறும் ரூ.100 முதலீடு செய்து ரூ.2 லட்சம் பெறலாம்.. அசத்தும் அஞ்சலக RD திட்டம்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த கலைஞர் கனவு இல்லம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் பொதுமக்களுக்கு முழு தொகையு மொத்தமாக வழங்கப்படாது. மாறாக, அஸ்திவாரம் அமைக்கும் போது, ஜன்னல்கள் அமைக்கும் போது, மேற்கூரை அமைக்கும் போது என கட்டுமானம் எவ்வளவு தூரம் என்பதை அளவிட்டு 4 தவணைகளாக பணம் வழங்கப்படும் என்பதுன் குறிப்பிடத்தக்கது.