5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Pongal Gift : தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. பொங்கல் பரிசு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!

Tamil Nadu Government | பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசு தொகையும் வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகை வர இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அது குறித்து தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Pongal Gift : தமிழக மக்களுக்கு குட் நியூஸ்.. பொங்கல் பரிசு குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!
மு.க.ஸ்டாலின்
vinalin
Vinalin Sweety | Updated On: 30 Aug 2024 10:38 AM

பொங்கல் பரிசு : தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள் என சிறப்பாக அழைக்கப்படுகிறது. அதனால் தமிழர்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை கோலகலமாக கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகை தமிழர்கள் பண்டிகை மட்டுமன்றி உழவர்களுக்கான பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு, அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு சிறப்பு தொகுப்பு மற்றும் பரிசு தொகையும் வழங்கி வருகிறது. பொங்கல் பண்டிகை வர இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அது குறித்து தமிழக அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : Senior Citizen Saving Scheme : மூத்த குடிமக்களுக்கான FD-க்கு 8.2% வட்டி.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

இலவச வேட்டி சேலைக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு

அதாவது 2025 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு வழங்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்துள்ளது. இது குறித்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பொங்கல் பண்டிகையின் போது தமிழ்நாடு முழுவது உள்ள நியாய விலை கடைகள் மூலம் இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டு வருகிறது. இலவச வேட்டி சேலைகள் அனைத்து கைத்தறி மற்றும் டெபல் தறிகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால், கைத்தறி மற்றும் டெபல்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்புகளுக்கு இந்த திட்டம் பெரிதும் உதவியாக இருக்கிறது.

1,77,64,000 சேலைகள் மற்றும் 1,77,200 வேட்டிகள் வழங்க திட்டம்

இந்த நெசவாளர் குடும்பங்கள் பயன்பெறுவதை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்தின் கீழ் பொங்கல் பண்டிகைக்கு வழங்குவதற்கு தேவைப்படும் வேட்டி சேலைகளை குறிப்பிட்ட காலத்துக்குள் உற்பத்தி செய்து வழங்கிட ஏதுவாக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முன்பணமாக வழங்கிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடி அனுமதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 2025 தைப் பொங்கல் திருநாளையொட்டி, தமிழகம் முழுவதிலும் உள்ள ஏழை மக்களுக்கு ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகளும், அதேபோல ஏறத்தாழ 1 கோடியே 77 லட்சத்து 2 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : RBI : இனி கிராமத்திலும் ஈசியா லோன் கிடைக்கும்.. ரிசர்வ் வங்கி அதிரடி!

பரிசு தொகை எப்போது?

பொங்கல் சிறப்பு தொகுப்பில் அரிசி, சர்க்கரை, பாசி பயிறு, கரும்பு உள்ளிட்ட பொருட்களின் தொகுப்பு வழங்கப்படும் நிலையில், பொங்கள் சிறப்பு தொகையும் வழங்கப்படும். எனவே இது குறித்து, அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Latest News