5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

EPFO : தமிழில் யுடியூப் சேனலை தொடங்கிய EPFO.. பயனர்களின் சந்தேகங்களை தீர்க்க புதிய முயற்சி!

EPFO Youtube Channel | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் சார்பில் SOCIALEPFO TAMIL என்ற தமிழில் புதிய யுடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. அந்த சேனலில் இதுவரை 16 வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளதாகவும், பயனர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

EPFO : தமிழில் யுடியூப் சேனலை தொடங்கிய EPFO.. பயனர்களின் சந்தேகங்களை தீர்க்க புதிய முயற்சி!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 10 Jul 2024 10:41 AM

ஊழியர் வருங்கால வைப்பு நிதி : ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் தமிழில் யுடியூன் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தியில் மட்டும் EPFO யுடியூப் சேனல் தொடங்கிய நிலையில், தற்போது இந்திக்கு அடுத்தபடியாக தமிழில் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு, ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊழியர்கள் இந்த பணத்தை தங்கள் தேவைகளுக்காக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர்கள் தங்களது பணி காலம் முழுவதும் பிஎஃப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்கவில்லை என்றால், பணி ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கு திருத்தம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களை மேற்கொள்ளவதற்கு தேவையான இணையதள வசதியும் உள்ளது. ஆனால் சர்வர் கோளாறு காரணமாக பெரும்பாலான நேரங்களில், பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பயனர்கள் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களுக்கு சென்று தங்களது குறைகளையும், சந்தேகங்களையும் தீர்த்து வருகின்றனர். இதனால் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் கூட்ட நெரிசலுடன் காணப்படுகின்றன.

இதையும் படிங்க : மாதம் ரூ.20,000 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

கூட்ட நெரிசலாக காணப்படும் அலுவலகங்கள்

இதேபோல கோவையில் உள்ள அலுவலகத்தில் பல்வேறு காரணங்களுக்காக ஒரு நாளைக்கு சுமார் 200 முதல் 300 பயணர்கள் அலுவலகத்திற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இருப்பினும் அலுவலகங்களிலும் சில சமையங்களில் சர்வர் பிரச்னை உள்ளதால திருத்தங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் பயனர்கள் ஆன்லைனில் முயற்சி செய்ய வேண்டும் என்றும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோவை மண்டல EPFO அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : Gold Bonds : தங்க பத்திரம் உள்ளிட்ட சேமிப்பு பத்திரங்கள்.. எதை கவனிக்கனும்? வட்டி மற்றும் முதலீட்டு விவரம்!

புதிய யுடியூன் சேனல்

மேலும் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் சார்பில் SOCIALEPFO TAMIL என்ற தமிழில் புதிய யுடியூப் சேனல் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுவரை 16 வீடியோக்கள் பதிவிடப்பட்டுள்ளதாகவும், பயனர்களின் சந்தேகங்களை தீர்க்கும் விதமாக தொடர்ந்து வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News