Tata Sons : ஒரே நாளில் ரூ.20300 கோடி கடனை அடைத்த டாடா சன்ஸ்.. வாய் அடைத்து போன ஆர்பிஐ!
Debt repaid | டாடா சன்ஸ், டாட குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அது ஒரு தனியார் நிறுவனமாக இயங்கி வந்த நிலையில், ஆர்பிஐ-ன் விதிமுறை காரணமாக அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து NBFC நிறுவனங்களின் அப்லேயர் நிறுவனங்கள் பங்குச்சத்தையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு காட்டாயம் பட்டியல் படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
டாடா குழுமம் : இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமங்களில் ஒன்று டாடா குழுமம். தொழில்நுட்பம் தொடங்கி ஆடை விற்பனை வரை டாடா கால் பதிக்காத இடங்களே இல்லை. மின்சாதன பொருட்கள், வைர நகை வியாபரம் என டாடாவின் நிறுவனங்கள் நீண்டுக்கொண்டே போகும். இந்தியாவின் மிகப்பெரிய வணிக குழுமமாக இருப்பது மட்டுமன்றி, தரத்திற்கும் டாடா சிறந்து விளங்குகிறது. குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்கி வரும் டாடா நிறுவனத்திற்கு மக்கள் மத்தியில் எப்பொழுதும் தனி சிறப்பு உள்ளது. எப்பொழுதும் அசாத்தியாமன செயல்களை செய்து ஆச்சர்யப்படுத்தும் டாடா, தற்போது ஒரு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எது என்ன என விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : PPF : மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.6.50 லட்சம் வரை வருமான ஈட்டலாம்.. பிபிஎஃப் முதலீடு!
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட டாடா சன்ஸ் நிறுவனம்
டாடா சன்ஸ், டாட குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. அது ஒரு தனியார் நிறுவனமாக இயங்கி வந்த நிலையில், ஆர்பிஐ-ன் விதிமுறை காரணமாக அந்த நிறுவனம் பங்குச் சந்தைக்கு வரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து NBFC நிறுவனங்களின் அப்லேயர் நிறுவனங்கள் பங்குச்சத்தையில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு காட்டாயம் பட்டியல் படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, டாடா கேப்பிடல் நிறுவனத்தின் அப்பர்லேயர் NBFC ஆக டாட சன்ஸ் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. இதன் மூலம வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் டாடா சன்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்று டாடா குழுமம் திட்டமிட்டுவந்தது.
இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!
ரூ.20,300 கோடி கடனை ஒரே நாளில் அடைத்த டாடா சன்ஸ் – வாய் அடைத்து போன ஆர்பிஐ!
அதன்படி ரூ.20,300 கோடி கடனை மொத்தமாக அடைத்துவிட்டு டாடா சன்ஸ் நிறுவனம் தனது பதிவு சான்றை திரும்ப கொடுத்துள்ளது. இதன் காரணமாக இனி டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படாது. இனிமேல் டாடா சன்ஸ் நிறுவனம் தனியார் நிறுவனமாக செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. டாடாவின் இந்த அதிரடி முடிவால் ஆர்பிஐ வாய் அடைத்து போய் உள்ளது.