Ratan Tata : பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்த டிசிஎஸ் நிறுவனம்.. 5 நாட்களில் ரூ.37,971 கோடி நஷ்டம்!

TCS Loss | ரத்தன் டாடாவின் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கின் விலை கடந்த ஜூலை 29 ஆம் தேதி, அதாவது அதாவது திங்கள்கிழமை, ரூ.4406 ஆக இருந்தது. இதில் இருந்து சரியாக 5 நாட்கள் கழித்து, அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு ரூ.4283 ஆக குறைந்தது. இருப்பினும் டிசிஎஸ் நிறுவனத்தால், இந்தியாவின் மதிப்புமிக்க 10 நிறுவனங்கள் பட்டியலில் 2வது இடம் பிடிக்க முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Ratan Tata : பங்குச்சந்தையில் கடும் சரிவை சந்தித்த டிசிஎஸ் நிறுவனம்.. 5 நாட்களில் ரூ.37,971 கோடி நஷ்டம்!

ரத்தன் டாடா

Updated On: 

05 Aug 2024 17:15 PM

கடுமையாக சரிந்த டிசிஎஸ் பங்குகள் : ரத்தன் டாடாவின் டிசிஎஸ் நிறுவனம் உலகில் உள்ள முன்னணி, சர்வதேச ஐடி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. அது தனது சேவைகள் மற்றும் கிளைகளை தொடர்ந்து உலகம் முழுவது விரவடைய செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆனால் இந்த நிறுவனம் கடந்த வாரங்களில் பங்குகளில் கடும்  சரிவை சந்தித்துள்ளது. இந்தியாவில் உள்ள முதல் 10 மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலில் ரத்தன் டாடாவின் இந்த டிசிஎஸ் நிறுவனமும் உள்ளது. இந்நிலையில் டாடா கன்சல்டன்சி சர்வீசின் மதிப்பு சுமார் ரூ.37,971 கோடி சரிந்து ரூ.15,49,626 கோடியாக உள்ளது. இது இந்தியாவின் முதல் 10 மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலில் முதன்மையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரே வாரத்தில் கடுமையாக சரிந்த டிசிஎஸ் பங்குகள்

ரத்தன் டாடாவின் டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கின் விலை கடந்த ஜூலை 29 ஆம் தேதி, அதாவது அதாவது திங்கள்கிழமை, ரூ.4406 ஆக இருந்தது. இதில் இருந்து சரியாக 5 நாட்கள் கழித்து, அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி டிசிஎஸ் நிறுவனத்தின் பங்கு ரூ.4283 ஆக குறைந்தது. இருப்பினும் டிசிஎஸ் நிறுவனத்தால், இந்தியாவின் மதிப்புமிக்க 10 நிறுவனங்கள் பட்டியலில் 2வது இடம் பிடிக்க முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Stock Market Crash : பங்குச்சந்தை திடீர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? வரும் நாட்கள் எப்படி இருக்கும்? முழு விவரம்

சந்தை மதிபீட்டை இழந்த நிறுவனங்கள்

இதேபோல,  கடந்த வாரம் இந்தியாவில் அதிக மதிப்புள்ள முதல் 10 நிறுவனங்களில் சுமார் 8 நிறுவனங்கள் ரூ.1,28,913 கோடி இழந்தன. இதன் காரணமாக டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் நிறுவனங்கள் பின் தங்கின. அந்த வகையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.23,811.88 கோடி குறைந்து ரூ.7,56,250 கோடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்ட ரிலையன்ஸ்

இந்த சூழலுக்கு மத்தியில் இந்தியாவின் முதல் 10 மதிப்புமிக்க நிறுவனங்களின் பட்டியலில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முதல் இடத்தை தக்கவைத்துள்ளது. அதனை தொடர்ந்து டாடாவின் டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்த ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இந்திய ஸ்டேட் வங்கி, இன்ஃபோசிஸ், எல்.ஐ.சி, ஹிந்துஸ்டஹன் யூனிலீவர் மற்றும் ஐடிசி உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Stock Market 05 August: பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சி… ரூ.10 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. உங்க ஸ்டாக்கின் நிலை என்ன?

சரிவை சந்தித்த பங்குச்சந்தை

இவ்வாறு இந்திய நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ள நிலையில், வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்தகத்தை தொடங்கியுள்ளன. இந்த நிலையில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,636 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த நிலையில், தற்போது 79,345 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகின்றன. இதே போல தேசிய பங்குச்சந்தையின் குறியீடான நிஃப்டி 485 புள்ளிகள் சரிந்து, 24,232 புள்ளிகளில் வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?