Ration Card : ரேஷன் கார்டில் இத்தனை வகைகள் இருக்கிறதா? உங்கள் கார்டு எந்த வகை என்று தெரிந்துக்கொள்ளுங்கள்!
Categories | ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன.
ரேஷன் கார்டு : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கும். ரேஷன் அட்டை வைத்திருக்கும் குடும்பங்களுக்கு அரசு இலவசமாக அரிசி, குறைந்த விலையில் பருப்பு, எண்ணெய், கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டம் மயமாக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைகளும் ஸ்மார்ட் கார்டுகளாக வடிவம் பெற்றுள்ளன. அதன்படி குடும்ப உறுப்பினர்களின் கைரேகைகள் ரேஷன் அட்டையில் இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை ரேஷன் கடைக்கு செல்லும்போதும் கைரேகை பதிவு செய்தால் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இவ்வாறு பொதுமக்களின் வாழ்வில் ரேஷன் கடைகள் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், மொத்தம் எத்தனை வகை ரேஷன் கார்டுகள் உள்ளது, யார் யாருக்கு என்ன வகை கார்டுகள் வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Fixed Deposit : 1 ஆண்டுக்கான FD திட்டம்.. 8.25% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!
இந்தியாவில் வழங்கப்படும் ரேஷன் கார்டுகளின் வகைகள்
இந்தியாவில் பல்வேறு வகையான ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தகுதியின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரின் பொருளாதார அடிப்படையில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன.
அந்த்யோதயா அன்ன யோஜனா AAY
அந்த்யோதயா அன்ன யோஜானா ரேஷன் கார்டுகள் இந்தியாவில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ரேஷன் கார்டுகள் ரூ.15,000-க்கு கீழ் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களுக்கு வழங்கப்படுகிறது.
BPL ரேஷன் கார்டு
இந்தியாவில் வறுமை கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இந்த BPL ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. அதன்படி, ரூ.24,200 ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இதில் உள்ள இந்த BPL – Below Poverty Line என்பதை குறிக்கும். அதாவது வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்கள் என அர்த்தம்.
APL ரேஷன் கார்டு
வறுமை கோட்டின் மேல் உள்ளவர்களுக்கு இந்த APL ரேஷன் கார்டு வழங்கப்படும். அதன்படி, ரூ.1,00,000 ஆண்டு வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இந்த ரேஷன் கார்டு வழங்கப்படும். இதில் APL – Above Poverty Line என்பதை குறிக்கும். அதாவது வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் என்று அர்த்தம்.
இதையும் படிங்க : PM Kisan : பிஎம் கிசான் 18வது தவணை பட்டியலில் உங்கள் பெயர் இல்லையா?.. உடனே இத பண்ணுங்க!
AAY மற்றும் BPL ரேஷன் கார்டுகளை போல் இல்லாமல் இந்த APL கார்டு வித்தியாசமானதாகும். ஏனென்றால் அது பொருளாதார ரீதியாக பிரச்னை இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் ரேஷன் கார்டு ஆகும். ஆனால், AAY மற்றும் BPL ரேஷன் கார்டுகள் அப்படியானவை அல்ல. அந்த கார்டுகளுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.