Fixed Deposit : ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
Savings Scheme | சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்த மக்கள் அனைவரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். அந்த வகையில் பொதுமக்கள் சேமிக்க சிறு சேமிப்பு, அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் மற்றும் நிலையான வைப்புநிதி திட்டங்கள் ஒரு சிறந்த தேர்வாக உள்ளன. பல வங்கிகளில் அதிக வட்டியுடன் கூடிய நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் 1 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் எவை என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : DA Hike : தமிழக அரசு ஊழியர்களுக்கும் 3% அகவிலைப்படி உயர்வு.. முதல்வருக்கு எழுந்த கோரிக்கை!
நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்கும் 5 வங்கிகள்
சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!
ஹெச்டிஎஃப்சி வங்கி
பொது குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, ஹெச்டிஎஃப்சி வங்கி 6.60% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.10% வட்டி வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி
பொது குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, ஐசிஐசிஐ வங்கி 6.7% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.2% வட்டி வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி
பொது குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, கோடக் மஹிந்திரா வங்கி 7.1% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.6% வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா
பொது குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.8% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வட்டி வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா
பொது குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, பேங்க் ஆஃப் பரோடா 6.85% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.35% வட்டி வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பொது குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, பஞ்சாப் நேஷனல் வங்கி 6.8% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வட்டி வழங்குகிறது.
பெடரல் வங்கி
பொது குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, பெடரல் வங்கி 6.8% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.3% வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : SBI Amrit Vrishti : எஸ்.பி.ஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.. வட்டி மட்டும் 7.75%.. அம்ரித் விருஷ்டி குறித்த முழு விவரம் இதோ!
மேற்குறிப்பிட்ட இந்த 6 வங்கிகள் 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.