Inflation : தங்காளி முதல் தங்கம் வரை.. பணவீக்கத்திற்கு காரணமான 5 பொருட்கள்.. நிதித்துறை செயலர் கூறுவது என்ன?
Tomato | தலைநகர் டெல்லியில் ஆங்கில வணிக ஊடகத்தின் சார்பில் உலக தலைமைத்துவ மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செயலர் துஹின் காந்த் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், கடின முயற்சிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்து விடுகிறது என்று தெரிவித்தார்.
பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும் நாடுகளுக்கு இணையாக, இந்தியா பொருளாதாரத்தில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. பொருளாதாரத்தில் வளர்ந்த நாடு என்ற இலக்கை அடையும் வகையில், இந்தியா தொடர்ந்து பணியாற்றி வருகிறது. இவ்வாறு பொருளாதார நிலையில் முன்னேற இந்தியா கடினமாக உடைத்துக்கொண்டிருக்கும் நிலையில், பணவீக்கம் இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக அமைகிறது. பணவீக்கம் காரணமாக பொருளாதார ரீதியாக பல்வேறு சிக்கல்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் இந்திய பொருளாதாரத்தின் பண வீக்கத்திற்கு தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட ஐந்தே ஐந்து பொருட்கள் தான் காரணம் என்று மத்திய அமைச்சகத்தின் நிதித்துறை செயலர் விரக்தியுடன் தெரிவித்துள்ளார்.
நிதித்துறை செயலர் கூறியது என்ன?
தலைநகர் டெல்லியில் ஆங்கில வணிக ஊடகத்தின் சார்பில் உலக தலைமைத்துவ மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் செயலர் துஹின் காந்த் பங்கேற்று பேசினார். அப்போது பேசிய அவர், கடின முயற்சிகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்து விடுகிறது. இதறு ஐந்தே ஐந்து பொருட்கள் தான் முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளார். அதாவது, தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு, தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய ஐந்து பொருட்கள் தான் பணவீக்கத்திற்கு முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
70 சதவீதத்திற்கு மேல் இருக்கும் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு
இந்தியா சுமார் 165 கோடி மக்கள் தொகையை கொண்டுள்ளது. இந்தியாவின் இந்த ஒட்டுமொத்த மக்கள் தொகை அளவில் சுமார் 112 கோடி மக்கள் வேலை செய்யும் நபர்களாக இருக்கின்றனர். வளர்ந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய இந்தியா பயணிக்கும் நாட்டின் மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு மட்டும் 70 சதவீதத்திற்கும் மேல் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 15 ஆண்டுகளாக பெஸ்ட் ரிட்டன்.. டாப் 5 எஸ்.பி.ஐ மியூச்சுவல் ஃபண்டுகள் தெரியுமா?
சவால்களை சமாளித்து வளரும் இந்தியா
நாட்டின் வளர்ச்சி பாதைக்கு எதிராக வீசும் காற்றையும் சமாளித்து, நாம் வளர்ந்தாக வேண்டும் என்று தெரிவித்தார். அவற்றை எல்லாம் சமாளித்து இந்தியா வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ஆண்டுதோறும் சரியான அளவில் பருவமழை பொழிய வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம். அதன் மூலம் கிராமங்களில் மக்களின் பொருளாதார நிலை செழிப்புற்று, பொருட்களின் தேவையை அதிகரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : FD Scheme : 1 ஆண்டுக்கும் குறைவான FD திட்டம்.. 7.05% வட்டி வழங்கும் வங்கி.. முதலீடு மற்றும் லாபம் குறித்த முழு விவரம் இதோ!
நாட்டில் ஏற்படும் பொருளாதார சீர்திருத்தங்களை வெறுமனே தனியார் மயமாக்கல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது என்று தெரிவித்த அவர், அவை ஏற்படுத்தும் சமூக முன்னேற்றம், தொழில் செய்வதற்கு ஏற்ற சூழல் ஆகியவற்றை உணர வேண்டும். வர்த்தகமும், வர்த்த கொள்கைகளும் ஒருசேர இணைந்து பணியாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் என்றால் என்ன?
பணவீக்கம் என்பது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலை அதிகரிப்பது ஆகும். ஏதேனும் ஒரு அத்தியாவசிய பொருட்களின் விலை திடீரென அதிகரிக்கும்போது பண வீக்கம் ஏற்படுகிறது. இதற்கு அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையும் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கி ஆகியவை அத்தியாவசிய பொருட்களாக உள்ளன. அதேபோல தங்கள், வெள்ளி பொருட்களை வாங்கி மக்கள் சேமிக்கின்றனர். இதன் காரணமாக இந்த பொருட்களின் தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இந்த ஐந்து பொருட்கள் தான் இந்திய பொருளாதாரத்தின் பணவீக்கத்திற்கு முக்கிய காரணமாக துஹின் காந்த் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.