Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் 7 வாங்கிகள்.. பட்டியல் இதோ!
Saving Schemes | சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மக்கள் மத்தியில் சேமிக்கும் பழக்கம் அதிகரித்துள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் துறைகளில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும் திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் 3 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் 7 வங்கிகள் மற்றும் அதன் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : DA Hike : அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ஏற்றம்.. யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?
3 ஆண்டுகளுக்கான FD – அதிக வட்டி வழங்கும் 7 வங்கிகள்!
சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் 3 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : GST Exemption: இன்சூரன்ஸ் டூ தண்ணீர் பாட்டில்.. ஜிஎஸ்டி வரி குறையப்போகுதா? நிர்மலா சீதாராமன் எடுத்த முடிவு!
7.6% வரை அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
ஹெச்டிஎஃப்சி வங்கி
பொது குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, ஹெச்டிஎஃப்சி வங்கி 7% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்குகிறது.
ஐசிஐசிஐ வங்கி
பொது குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, ஐசிஐசிஐ வங்கி 7% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.2% வட்டி வழங்குகிறது.
எஸ்பிஐ வங்கி
பொது குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, எஸ்பிஐ வங்கி 6.75% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!
பஞ்சாப் நேஷனல் வங்கி
பொது குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, பஞ்சாப் நேஷனல் வங்கி 7% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்குகிறது.
இந்திய யூனியன் வங்கி
பொது குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, இந்திய யூனியன் வங்கி 6.7% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.2% வட்டி வழங்குகிறது.
பெடரல் வங்கி
பொது குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, பெடரல் வங்கி 7% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.5% வட்டி வழங்குகிறது.
கோடக் மஹிந்திரா வங்கி
பொது குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு, கோடக் மஹிந்திரா வங்கி 7% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.6% வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.