FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!

Top 7 Banks | சேமிப்பு திட்டங்களில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் FD என அழைக்கப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம், திட்டத்தின் முடிவில் நல்ல வருமானத்தை பெற முடியும்.

FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள்.. பட்டியல் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

11 Nov 2024 17:45 PM

சமீப காலமாகவே சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்து பொதுமக்கள் சேமிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், எத்தகைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம்  நல்ல வருமானத்தை பெற முடியும் என தெரியாமல் குழம்பி வருகின்றனர். அவ்வாறு முதலீடு செய்ய விரும்பும் நபர்களுக்கு FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நிலையில், 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Ration Shop : ரேஷன் பொருட்கள் விற்பனையில் அதிரடி மாற்றம்.. இனி இந்த அளவில் தான் பொருட்கள் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

சேமிப்பு அல்லது முதலீடு ஏன் மனிதர்களின் வாழ்வில் முக்கியமாகிறது?

மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம், சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் நிதி பற்றாக்குறை, நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படடும் ஆபத்து உள்ளது. எனவே, அனைவரும் கட்டாயம் நிதி தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்ற நிலை உள்ளது. அவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிதி சிக்கல்கள் அற்ற எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். எனவே தான் தனியார் மற்றும் அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

நிலையான வைப்புநிதி திட்டம்

அத்தகைய சேமிப்பு திட்டங்களில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் FD என அழைக்கப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம், திட்டத்தின் முடிவில் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 7 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் டாப் 7 வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Scheme : 1 ஆண்டுக்கும் குறைவான FD திட்டம்.. 7.05% வட்டி வழங்கும் வங்கி.. முதலீடு மற்றும் லாபம் குறித்த முழு விவரம் இதோ!

3 ஆண்டுகளுக்கான FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

ஹெச்டிஎஃப்சி வங்கி

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி  7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.

கோடக் மஹிந்திரா வங்கி

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு கோடக் மஹிந்திரா வங்கி  7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.6 சதவீதம் வட்டி வழங்குகிறது.

நேஷனல் வங்கி

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு நேஷனல் வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : RBI : நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 6.7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.2 சதவீதம் வட்டி வழங்குகிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25 சதவீதம் வட்டி வழங்குகிறது.

பரோடா பீச் வங்கி

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு பரோடா பீச் வங்கி 6.8 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமைய சில டிப்ஸ்!
உத்வேகம் அளிக்கும் நேருவின் பொன்மொழிகள்!
சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?