Bank Holiday : அக்டோபர் மாதத்தில் 9 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. முழு விவரம் இதோ!
Bank Calendar | இந்த குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், ஏடிஎம்கள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் வங்கி இணையதளங்கள் வழியாக தங்களது வங்கிச் சேவைகளை அணுக முடியும்.
செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு அக்டோபர் மாதம் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வழக்கமான விடுமுறைகளை தாண்டி 2 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் மாதத்திற்கான வங்கிகளின் விடுமுறை தினங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Tirumala Tirupati: வீடுகளில் 6 மணிக்கு இதை பண்ணுங்க.. தோஷம் போகும்.. திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள்!
அக்டோபர் மாத வங்கி விடுமுறை பட்டியல்
2 அக்டோபர் 2024 – புதன் கிழமையான அன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள் என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
6 அக்டோபர் 2024 – ஞாயிற்று கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
10 அக்டோபர் 2024 – வியாழன் கிழமையான அன்று மஹா சப்தமி தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
12 அக்டோபர் 2024 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
13 அக்டோபர் 2024 – ஞாயிற்று கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
20 அக்டோபர் 2024 – ஞாயிற்று கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
26 அக்டோபர் 2024 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
27 அக்டோபர் 2024 – ஞாயிற்று கிழமை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
31 அக்டோபர் 2024 – வியாழன் கிழமையான அன்று தீபாவளி பண்டிகை என்பதால் தமிழகம் முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : iPhone 16 Series : ஐபோன் 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வாங்க வரிசையில் நிற்க தேவை இல்லை.. வெறும் 20 நிமிடங்களில் டெலிவரி செய்யும் நிறுவனங்கள்!
மேற்குறிப்பிட்ட தகவலின் படி அக்டோபர் மாதத்தில் 9 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும், வாடிக்கையாளர்கள் நெட் பேங்கிங், ஏடிஎம்கள், மொபைல் பயன்பாடுகள் மற்றும் வங்கி இணையதளங்கள் வழியாக தங்களது வங்கிச் சேவைகளை அணுக முடியும். இருப்பினும், வங்கி விடுமுறை தினங்களை மனதில் கொண்டு அதற்கேற்றாவாறு, தங்களுக்கான பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதையும் படிங்க : IND VS BAN 2nd Test: கான்பூர் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்த பிசிசிஐ.. மீண்டும் மிரட்டுமா ரோஹித் படை..?
மக்கள் மத்தியில் வங்கி பயன்பாடு
மொபைல் போன்கள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது அனைத்து துறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. முன்பு இருந்ததை போல் இல்லாமல் வங்கிகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. முன்பெல்லாம் பண பரிவர்த்தனை அல்லது நிதி தொடர்பான தேவைகளுக்கு வங்கிக்கு செல்ல வேண்டிய தேவை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் மாறிவிட்டது. வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பது, பணம் செலுத்துவது, கடன் செலுத்துவது என அனைத்தையும் வீட்டில் இருந்தபடியே செய்துக்கொள்ள முடியும். ஏடிஎம்கள், மொபைல் செயலிகள் மூலம் வங்கிக்கு செல்ல வேண்டிய தேவைகள் முற்றிலுமா குறைக்கப்பட்டு விட்டன. இருப்பினும், வங்கி கணக்கு திறப்பது, வங்கி கணக்கில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்றால் வங்கி சென்று திருத்தம் செய்வதையே மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
எனவே வங்கிகளின் விடுமுறை நாட்களை மனதில் கொண்டு பொதுமக்கள், வங்கி தொடர்பான வேலைகளை திட்டமிட்டுக்கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.