5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ITR Refund : வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா?.. இந்த 8 காரணங்களாக கூட இருக்கலாம்.. உடே செக் பண்ணுங்க!

Income Tax | 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கமளித்த வருமான வரித்துறை, காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்றும் வருமான வரி செலுத்துவோர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.

ITR Refund : வருமான வரி ரீஃபண்ட் இன்னும் கிடைக்கவில்லையா?.. இந்த 8 காரணங்களாக கூட இருக்கலாம்.. உடே செக் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 30 Aug 2024 15:11 PM

வருமான வரி திரும்ப பெறுதல் : இந்தியாவில் குறிப்பிட்ட தொகைகளுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதிக்கப்படும். அதன்படி 2023 – 2024 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31 ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்வதற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்து விளக்கமளித்த வருமான வரித்துறை, காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்றும் வருமான வரி செலுத்துவோர் ஜூலை 31 ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது. வருமான வரித்துறையின் இந்த அறிவிப்பை அடுத்து, பெரும்பாலானோர் வருமான வரி செலுத்தி முடித்தனர். தற்போது, வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும் என பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் உங்களுக்கு இன்னும் வருமான வரி ரீஃபண்ட் கிடைக்கவில்லை என்றால் இவையெல்லாம் ஒரு காரணமாக இருக்கலாம்.

இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

வருமான வரி ரீஃபண்ட் கிடைக்காமல் இருப்பதற்கான 8 காரணங்கள்

  • உங்கள் பான் கார்டு செயல்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைகப்படவில்லை என்றால் அதன் சேவை முடக்கி வைக்கப்படும். எனவே உங்கள் பான் கார்டுடன் ஆதார் கார்டு லிங் செய்யப்பட்டுள்ளதா என்பதை சர்பார்த்துக்கொள்ளுங்கள்.
  • பிழையான வங்கி விவரங்கள், அதாவது வங்கி கணக்கு எண், MICR Code, IFSC Code மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் பிழையாக இருக்கலாம்.
  • வருமான வரி தாங்கள் செய்த நபர் டிஜிட்டல் KYC செய்யாமல் இருக்கலாம்.
  • நீங்கள் கொடுத்த வங்கி கணக்கு விவரங்கள் Current Account அல்லது Savings Account ஆக மட்டுமே இருக்க வேண்டும். வேறு எந்த கணக்காகவும் இருக்க கூடாது.
  • வங்கி கணக்கு குறித்த தகவல்கள் பிழையாக இருப்பது.
  • நீங்கள் ஐடிஆர்-ல் கொடுத்த வங்கி கணக்கு மூடப்பட்டிருப்பது.
  • நீங்கள் ஐடிஆர் ஐடிஆர் ரீஃபண்டுக்கு கொடுத்த வங்கி கணக்கு முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டது என்றாலும் ரீஃபண்ட் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.

இதையும் படிங்க : Senior Citizen Saving Scheme : மூத்த குடிமக்களுக்கான FD-க்கு 8.2% வட்டி.. அசத்தும் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

மேற்குறிப்பிட்ட இந்த 8 காரணங்களால் கூட உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் கிடைகாமல் இருக்கலாம். எனவே நீங்கள் கொடுத்த தகவல்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை சரிபாருங்கள். ஏதேனும் தகவல் தவறாக இருந்தால் அது குறித்து வருமான வரித்துறையிடம் தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் உங்களுக்கு ரீஃபண்ட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News