Saving Scheme : பெண்களுக்கான சிறந்த 4 சேமிப்பு திட்டங்கள்.. முழு விவரம் இதோ!
Women | பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பெண்களுக்கு சிறப்பான 4 திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மனிதர்களின் பொருளாதாரத்தை நிலையாக வைத்திருப்பததில் சேமிப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம், சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி பற்றாக்குறை அல்லது நிதி நெருக்கடிகளில் சிக்கி, சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம். எனவே, ஒவ்வொரு தனி மனிதரும் தங்களின் நிதி தேவைகளுக்காக கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் ஒவ்வொருவரும் பாதுகாப்பான மற்றும் நிதி சிக்கல்கள் அற்ற எதிர்காலத்தை பெற முடியும். இதற்கு உதவும் விதமாக தனியார் மற்றும் அரசு சார்பில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல சிறப்பு அம்சங்களுடன் கூடிய சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு அதிக வட்டியுடன் கூடிய சிறந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க : மூன்று ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்.. எஸ்.பி.ஐ, ஐ.சி.ஐ.சி.ஐ, ஹெச்.டி.எஃப்.சி: எதில் பெஸ்ட் ரிட்டன்?
பெண்களுக்கு அதிக லாபம் தரும் 5 சேமிப்பு திட்டங்கள்
பெண்களுக்கு அதிக லாபம் வழங்கும் அஞ்சலத்தின் 5 சிறந்த சேமிப்பு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
சுகன்யா சம்ரித்தி யோஜனா, பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்க வேண்டும். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சுமார் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவிற்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதையும் படிங்க : SBI FD : எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான FD.. 5 ஆண்டுகளுக்கு ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம் பெண்களுக்கான சிறந்த திட்டமாக கருதபப்டுகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை வருமானமாக பெற முடியும். நிலையான வருமானம் இல்லாதவர்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், முதலீடு செய்த தொகைக்கான வட்டியை மாத வருமானமாக பெற்றுக்கொள்ளலாம்.
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ்
மகிளா சம்மன் சேமிப்பு சான்றிதழ் திட்டம் பெண்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. அனைத்து வயது பெண்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பெண்கள் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்த ஒரு ஆண்டிற்கு பிறகு அந்த தொகையில் இருந்து 40 சதவீதம் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : Senior Citizen FD : எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான அம்ரித் விருஷ்டி திட்டம்.. எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்பு சான்றிதழ் என்பது மிகவும் பாதுகாப்பான சேமிப்பு திட்டமாகும். இது அனைத்து வகையான முதலீட்டாளர்களுக்கும் ஏற்ற திட்டமாகும். இது குறிப்பாக பெண்களுக்கு சிறந்த சேமிப்பு திட்டமாக கருதப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகளாக உள்ள நிலையில், வெறும் ரூ.1,000 முதல் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு சுமார் 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.