5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Personal Loan : ரூ. 5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்கள்.. குறைந்த வட்டி விதிக்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

Interest Rate | மருத்துவ தேவை, கல்வி கட்டணம் என்ற உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவர்கள் ஏதேனும் ஒரு வங்கியில் கடன் வாங்குகின்றனர். இதன் மூலம் அதிக வட்டி விதிக்கும் வங்கிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். ஆனால் நிறைய வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் வழங்குகின்றன.

Personal Loan : ரூ. 5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்கள்.. குறைந்த வட்டி விதிக்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Published: 09 Aug 2024 13:50 PM

தனிநபர் கடன் : பெரும்பாலான மக்கள் தங்களின் உடனடி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக கடன் வாங்குகின்றனர். மருத்துவ தேவை, கல்வி கட்டணம் என்ற உடனடி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அவர்கள் ஏதேனும் ஒரு வங்கியில் கடன் வாங்குகின்றனர். இதன் மூலம் அதிக வட்டி விதிக்கும் வங்கிகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். ஆனால் நிறைய வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடன் வழங்குகின்றன. இந்த நிலையில், ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கு குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா தனிநபர் கடன்களுக்கு மலிவான வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதன்படி ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கு 10% வட்டி விதிக்கிறது. 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான மாத தவணையாக ரூ.10,624 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 444 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி தனிநபர் கடன்களுக்கு மலிவான வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதன்படி ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கு 10.4% வட்டி விதிக்கிறது. 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான மாத தவணையாக ரூ.10,744 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹச்.டி.எஃப்.சி வங்கி

ஹச்.டி.எஃப்.சி வங்கி தனிநபர் கடன்களுக்கு மலிவான வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதன்படி ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கு 10.5%-ல் இருந்து வட்டி வசூலிக்கிறது. 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான மாத தவணையாக ரூ.10.747 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி

தனிநபர் கடன்களுக்கு மலிவான வட்டி விகிதத்தை வழங்குகிறது ஐசிஐசிஐ வங்கி. அதன்படி ரூ.5 லட்சம் வரையிலான தனிநபர் கடன்களுக்கு 10.8% வட்டி விதிக்கிறது. 5 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் ரூ.5 லட்சம் கடனுக்கான மாத தவணையாக ரூ.10.821 செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Income Tax Refund : வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும்.. பான் கார்டு இருந்தால் போதும்.. சுலபமா தெரிஞ்சுக்கலாம்!

பெரும்பாலான வங்கிகள் தனிநபர் கடன்களுக்கு 15%-க்கும் மேல் வட்டி விதிக்கும் நிலையில், தனிநபர் கடன் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள், மேற்குறிப்பிட்டுள்ள வங்கிகளின் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்த்துவிட்டு கடனுக்கு விண்ணப்பிப்பது சிறப்பாக இருக்கும்.

Disclaimer : இந்தக்கட்டுரை முதற்கட்ட தகவல் மட்டுமே. லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News