FD Scheme : 2 ஆண்டுகளுக்கான FD.. 8% வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

Interest Rate | பொதுமக்கள் முதலீடு செய்வதற்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கப்படும் நிலையில், நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம்  நல்ல வருமானத்தை பெறலாம். 

FD Scheme : 2 ஆண்டுகளுக்கான FD.. 8% வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

05 Nov 2024 15:44 PM

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத கால சூழல்களில், நிதி பற்றக்குறை அல்லது நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் முதலீடு செய்வதற்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கப்படும் நிலையில், நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம்  நல்ல வருமானத்தை பெறலாம்.

இதையும் படிங்க : PPF : ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.82 லட்சம் வருமானம் பெறலாம்.. இந்த PPF திட்டம் குறித்து கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

2 ஆண்டுகளுக்கான FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

2 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த 5 வங்கிகள் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

ஆர்பிஎல் பேங்க்

ஆர்பிஎல் வங்கி தனது 2 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.1,717 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.1,717 வட்டி இணைந்து ரூ.11,717 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பெற்றோரின் ஓய்வூதியத்தில் எந்த குழந்தைக்கு முதல் உரிமை? புது விதி சொல்வது இதுதான்!

இண்டஸ்லேண்ட் பேங்க்

இண்டஸ்லேண்ட் வங்கி தனது 2 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.1,659 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.1,659 வட்டி இணைந்து ரூ.11,659 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : டாப் 5 FD திட்டங்கள்.. 1 ஆண்டு திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

டிசிபி வங்கி

டிசிபி வங்கி தனது 2 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.1,602 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.1,602 வட்டி இணைந்து ரூ.11,602 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SIP – யில் ரூ.1கோடி கிடைக்க வேண்டுமா? மாதம் இவ்வளவு சேமித்தால் போதும்!

கர்நாடகா வங்கி

கர்நாடகா வங்கி தனது 2 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.35 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.1,568 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.1,568 வட்டி இணைந்து ரூ.11,568 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நவம்பர் 15 முதல் கிரெடிட் கார்டுகளில் 15 மாற்றம்.. ஐசிஐசிஐ வங்கி விதிகள் என்ன தெரியுமா?

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தனது 2 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.1,545 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.1,545 வட்டி இணைந்து ரூ.11,545 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : FD Interest Rate : 7.15% வரை வட்டி.. பொதுத்துறை வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!