5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fixed Deposit : 444 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

Interest Rate | பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி.

Fixed Deposit : 444 நாட்கள் வரையிலான FD திட்டங்கள்.. அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 09 Aug 2024 13:51 PM

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கரூர் வைஸ்யா வங்கி

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்குகிறது கரூர் வைஸ்யா வங்கி. அதன்படி 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.50% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 8% வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Income Tax Refund : வருமான வரி ரீஃபண்ட் எப்போது கிடைக்கும்.. பான் கார்டு இருந்தால் போதும்.. சுலபமா தெரிஞ்சுக்கலாம்!

எஸ்.பி.ஐ (எஸ்.பி.ஐ) வங்கி

எஸ்.பி.ஐ வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்குகிறது. அதன்படி, அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது. அம்ரித் விருஷ்டி நிலையான வைப்புநிதி திட்டம் மார்ச் 31, 2025 ஆம் ஆண்டு வரை வாடிக்கையாளர்களுக்கு கிடைகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்குகிறது பஞ்சாப் நேஷனல் வங்கி. அதன்படி 400 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது.

கனரா வங்கி

கனரா வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்குகிறது. அதன்படி 444 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Senior Citizen: செம்ம… இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கு இத்தனை சலுகைகளா? முழு லிஸ்ட்!

பாங்க் ஆஃப் பரோடா

பாங்க் ஆஃப் பரோடா நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சிறந்த வட்டி வழங்குகிறது.  அதன்படி 399 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7.25% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு அதிகபட்சமாக 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News