FD Interest Rate : டாப் 5 நிலையான வைப்புநிதி திட்டங்கள்.. 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும வங்கிகள்!
Saving Scheme | பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்யவில்லை என்றால் எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் பல நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே தான், பொதுமக்கள் சேமிக்க மற்றும் முதலீடு செய்ய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதரம் மற்றும் நிதி சிக்கல்கள் அற்ற வாழ்க்கை ஆகியவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். பொதுமக்கள் சேமிப்பு அல்லது முதலீடு செய்யவில்லை என்றால் எதிர்பாராத சூழல்களில் ஏற்படும் பல நிதி சிக்கல்களை சந்திக்க நேரிடும். எனவே தான், பொதுமக்கள் சேமிக்க மற்றும் முதலீடு செய்ய பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களின் ஒன்று தான் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டம் பரவலாக FD என அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கப்படுவதால் சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்களுக்கு வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : FD Scheme : 2 ஆண்டுகளுக்கான FD.. 8% வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
5 ஆண்டுகளுக்கான FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
நவம்பர் மாதத்தில் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் இவைதான்.
டிசிபி வங்கி
டிசிபி வங்கி தனது 5 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.4 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.4,428 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.4,428 வட்டி இணைந்து ரூ.14,428 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!
தனலட்சுமி வங்கி
தனலட்சுமி வங்கி தனது 5 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.4,323 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.4,323 வட்டி இணைந்து ரூ.14,323 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : SIP – யில் ரூ.1கோடி கிடைக்க வேண்டுமா? மாதம் இவ்வளவு சேமித்தால் போதும்!
இண்டஸ்லேண்ட் வங்கி
இண்டஸ்லேண்ட் வங்கி தனது 5 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.4,323 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.4,323 வட்டி இணைந்து ரூ.14,323 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : PPF : ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.82 லட்சம் வருமானம் பெறலாம்.. இந்த PPF திட்டம் குறித்து கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
எஸ் பேங்க்
எஸ் வங்கி தனது 5 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.4,323 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.4,323 வட்டி இணைந்து ரூ.14,323 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : டாப் 5 FD திட்டங்கள்.. 1 ஆண்டு திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
ஆர்பிஎல் வங்கி
ஆர்பிஎல் தனது 5 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.1 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.4,217 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.4,217 வட்டி இணைந்து ரூ.14,217 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பெற்றோரின் ஓய்வூதியத்தில் எந்த குழந்தைக்கு முதல் உரிமை? புது விதி சொல்வது இதுதான்!
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.