Fixed Deposit : மூத்த குடிமக்கள் எஃப்.டி.. 8.80% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ! - Tamil News | These are the banks providing highest interest rate for senior citizen fixed deposit | TV9 Tamil

Fixed Deposit : மூத்த குடிமக்கள் எஃப்.டி.. 8.80% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

Published: 

17 Jul 2024 16:08 PM

Highest FD interest rate | நிலையான முதலீட்டு திட்டங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முதலீடு செய்யலாம். ஆனால் இந்த திட்டங்களில் மூத்த குடிமக்களுக்கு அதிகப்படியாக 8.80% வரை வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி எந்த வங்கிகள் அதிக வட்டி வழங்குகின்றன என்பதை பார்ப்போம்.

Fixed Deposit : மூத்த குடிமக்கள் எஃப்.டி.. 8.80% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

மாதிரி புகைப்படம்

Follow Us On

நிலையான முதலீடு : இந்தியாவில் வசிக்கும் பெரும்பாளான மக்கள் எப்படியாவது அரசு வேலை வாங்க வேண்டும் என விரும்புவார்கள். காரணம் அரசு வேலைகளில் நிரந்தர பணி, ஊதியம் மற்றும் ஓய்வூதியமும் வழங்கப்படும். முதுமை காலத்தில் நிதி பற்றாக்குறை இல்லாமல், நிம்மதியான வாழ்கை வாழ்வதற்கு ஓய்வூதியம் நிச்சயம் அவசியமாகும். ஆனால் எல்லாராலும் அரசு வேலை வாங்க முடியாது. காரணம் அரசு பணிகளில் குறிப்பிட்ட இடங்கள் மட்டுமே இருக்கும். அதுமட்டுமன்றி வயது மற்றும் போட்டி தேர்வுகள் காரணமாக பலராலும் அரசு வேலைகளில் சேர முடிவதில்லை. அவர்கள் ஏதேனும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்வது அல்லது சுயமாக தொழில் தொடங்குகின்றனர். இந்நிலையில் அரசு ஊழியர்களை போலவே முதுமை காலத்தில், நிதி நெருக்கடி ஏதும் இல்லாமல் காலத்தை கழிப்பதற்காக அரசு பலவேறு சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் மூத்த குடிமக்கள் ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டம். அந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்களின் முதுமை காலம் பாதுகாப்பானதாக இருக்கும்.

மூத்த குடிமக்களுக்கு ஃபிக்ஸட் டெபாசிட்டில் அதிக வட்டி வழங்கும் 5 வங்கிகள்

எஸ்.பி.எம் வங்கி வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான நிலையான முதலீட்டு திட்டத்திற்கு எஸ்.பி.எம் வங்கி 8.8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை முதிர்ச்சியடையும் நிலையான முதலீட்டு திட்டங்களுக்கு இந்த வட்டி விகிதம் வழங்கப்படுகிறது.

டிசிபி வங்கியின் வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான நிலையான முதலீட்டு திட்டத்திற்கு டிசிபி வங்கி 8.55 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. 19 மாதங்கள் முதல் 20 மாதங்கள் வரையிலான நிலையான முதலீட்டு திட்டங்களுக்கு இந்த வட்டி வழங்கப்படுகிறது.

ஆர்.பி.எல் வங்கியின் வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான நிலையான முதலீட்டு திட்டத்திற்கு ஆர்.பி.எல் வங்கி 8.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. 18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரையிலான நிலையான முதலீட்டு திட்டங்களுக்கு இந்த வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Post Office RD : வட்டியை வாரி தரும் அஞ்சலக ஆர்.டி திட்டம்.. சிறப்பு அம்சங்கள் என்ன.. முழு விவரம் இதோ!

ஐ.டி.எஃப்சி வங்கியின் வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான நிலையான முதலீட்டு திட்டத்திற்கு ஐ.டி.எஃப்சி வங்கி 8.40 சதவீதம் வட்டி வழங்குகிறது. 500 நாட்களில் முதிர்சியடையும் நிலையான முதலீட்டு திட்டங்களுக்கு இந்த வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Monthly Income Scheme : ஆண்டுக்கு வட்டி மட்டுமே ரூ.66,600.. மாதாந்திர வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

பந்தன் வங்கியின் வட்டி விகிதம்

மூத்த குடிமக்களுக்கான நிலையான முதலீட்டு திட்டத்திற்கு பந்தன் வங்கி 8.35 சதவீதம் வட்டி வழங்குகிறது. ஒரு வருடத்தில் முதிர்ச்சியடையும் நிலையான முதலீட்டு திட்டங்களுக்கு இந்த வட்டி வழங்கப்படுகிறது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version