Senior Citizen FD : மூத்த குடிமக்களுக்கான FD.. 8.75% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
Interest Rate | நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டங்களுக்கு 8.75% வரை அதிக வட்டி வழங்கும் டாப் 6 வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
பொது மக்களுக்கு எதிர்பாராத நேரங்களில் நிதி பற்றாக்குறை ஏற்படும் அச்சம் உள்ளது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்கள் தங்களின் கடைசி காலத்தில் கடும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டியை வழங்கி வருகின்றன. பொதுமக்கள் தங்களது 50 அல்லது 60 களின் இந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அவர்களின் முதுமை காலம் எந்தவித நிதி பற்றாக்குறையும் இல்லாமல் மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இந்த நிலையில் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் தனியார் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : SSY Vs PPF : சுகன்யா சம்ரித்தி யோஜனா Vs பொது வருங்கால வைப்பு நிதி.. எது சிறந்த வட்டி வழங்குகிறது?
மூத்த குடிமக்களுக்கான FD – அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
கீழே குறிப்பிட்டுள்ள இந்த 6 வங்கிகள் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்குகின்றன. இந்த நிலையில், எந்த எந்த வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன என்பது குறித்து பார்க்கலாம்.
ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
மூத்த குடிமக்களுக்கான ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு ஜனா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
மூத்த குடிமக்களுக்கான ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு, உஜ்ஜிவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
மூத்த குடிமக்களுக்கான ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு, ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
மூத்த குடிமக்களுக்கான ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு, உட்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.6 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
மூத்த குடிமக்களுக்கான ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு, சூர்யோதயா ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.55 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி
மூத்த குடிமக்களுக்கான ஒரு ஆண்டுக்கான நிலையான வைப்பு நிதி திட்டத்திற்கு, யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி 8.35 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
இதையும் படிங்க : SBI FD : எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கான FD.. 5 ஆண்டுகளுக்கு ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.15 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!
மூத்த குடிமக்களுக்கான வரி சலுகை
இந்த நிலையான வைப்புநிதி திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுவது மட்டுமன்றி, வரி சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதாவது, நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு சுமார் ரூ.50,000 வரை வரி சலுகை வழங்கப்படுகிறது. வங்கிகள் மட்டுமன்றி, அஞ்சலங்கள் மற்றும் கூட்டுறவு சங்களில் தொடங்கும் முதலீட்டு கணக்குகளுக்கும் இது பொருந்தும். எனவே சேமிப்பு அல்லது முதலீடு திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பும் மூத்த குடிமக்கள் நிலையான வைப்பு நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் வரி சலுகை, அதிக வட்டி மற்றும் நிலையான லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Inflation : தங்காளி முதல் தங்கம் வரை.. பணவீக்கத்திற்கு காரணமான 5 பொருட்கள்.. நிதித்துறை செயலர் கூறுவது என்ன?
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.