Fixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!
Senior Citizen | இந்த திட்டங்களில் பொது குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு தான் அதிக வட்டி வழங்கப்படுகிறது. எனவே மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக நிலையான வைப்புநிதி திட்டம் உள்ளது.
பல தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் FD எனபப்டும் நிலையான வைப்புநிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களில் பொது குடிமக்களை விட மூத்த குடிமக்களுக்கு தான் அதிக வட்டி வழங்கப்படுகிறது. எனவே மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாக நிலையான வைப்புநிதி திட்டம் உள்ளது. இந்த நிலையில், நிலையான வைப்புநிதி திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Airtel : ரீச்சார்ஜ் திட்டங்களில் விபத்து காப்பீடு.. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஏர்டெல்.. எவ்வளவு தெரியுமா?
மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் FD
சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சமாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெறலாம். குறிப்பாக மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய இது சிறந்த திட்டமாகும். காரணம் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : Aadhaar Service : இனி தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை.. இந்தியா போஸ்ட் அதிரடி அறிவிப்பு!
இந்த நிலையில், மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (NorthEast Small Finance Bank )
மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு நார்த் ஈஸ்ட் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதிக வட்டி வழங்குகிறது. அதாவது, 546 நாட்கள் முதல் 1111 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு சுமார் 9.50% வரை வட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தில் ரூ.5 கோடி வரை முதலீடு செய்ய முடியும். இந்த வட்டி விகிதம் வரும் ஜூன் 25, 2025 முதல் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : EPFO : PF உறுப்பினர்களுக்கு முக்கியச் செய்தி.. EPF பணத்தை எடுக்கும் விதிகளில் அதிரடி மாற்றம்.. முழு விவரம் இதோ!
சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank )
மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சூர்யோதை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதிக வட்டி வழங்குகிறது. அதாவது, 2 முதல் 3 ஆண்டுகள் வரையிலான திட்டத்திற்கு சுமார் 9.10% வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் வரும் செப்டம்பர் 4.2024 முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank)
மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு யூனிட்டி ஸ்மால் ஃனைனான்ஸ் வங்கி அதிக வட்டி வழங்குகிறது. அதாவது, 1001 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு சுமார் 9.50% வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் வரும் அக்டோபர் 7, 2024 முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!
உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank)
மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு உத்கர்ஷ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி அதிக வட்டி வழங்குகிறது. அதாவது, 1500 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு சுமார் 9.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த வட்டி விகிதம் வரும் ஜூன் 7, 2024 முதல் அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.