FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள்.. லிஸ்ட் இதோ! - Tamil News | These are the banks which provides highest interest rates for 3 years fixed deposit schemes | TV9 Tamil

FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

Top 5 Banks | பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.

FD Interest Rate : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் டாப் 5 வங்கிகள்.. லிஸ்ட் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

06 Nov 2024 12:30 PM

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத கால சூழல்களில், நிதி பற்றக்குறை, நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD என்று அழைக்கப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம்  நல்ல வருமானத்தை பெறலாம்.

இதையும் படிங்க : FD Scheme : 2 ஆண்டுகளுக்கான FD.. 8% வரை வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

3 ஆண்டுகளுக்கான FD-க்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்

3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு இந்த 5 வங்கிகள் சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகின்றன.

டிசிபி வங்கி

டிசிபி வங்கி  தனது 3 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.55 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.2,516 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.2,516 வட்டி இணைந்து ரூ.12,516 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SIP – யில் ரூ.1கோடி கிடைக்க வேண்டுமா? மாதம் இவ்வளவு சேமித்தால் போதும்!

ஆர்பிஎல் பேங்க்

ஆர்பிஎல் வங்கி  தனது 3 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.2,497 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.2,497 வட்டி இணைந்து ரூ.12,497 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : PPF : ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.82 லட்சம் வருமானம் பெறலாம்.. இந்த PPF திட்டம் குறித்து கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

பந்தன் வங்கி

பந்தன் வங்கி  தனது 3 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.2,405 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.2,405 வட்டி இணைந்து ரூ.12,405ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : டாப் 5 FD திட்டங்கள்.. 1 ஆண்டு திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

இண்டஸ்லேண்ட் வங்கி

இண்டஸ்லேண்ட் வங்கி தனது 3 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.2,405 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.2,405 வட்டி இணைந்து ரூ.12,405ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பெற்றோரின் ஓய்வூதியத்தில் எந்த குழந்தைக்கு முதல் உரிமை? புது விதி சொல்வது இதுதான்!

எஸ் பேங்க்

எஸ் பேங்க்  தனது 3 ஆண்டுகளுக்கான கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.2,405 வட்டியாக கிடைக்கும். அதன்படி நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.2,405 வட்டி இணைந்து ரூ.12,405ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நவம்பர் 15 முதல் கிரெடிட் கார்டுகளில் 15 மாற்றம்.. ஐசிஐசிஐ வங்கி விதிகள் என்ன தெரியுமா?

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

மன்னிப்பு கேட்கக்கூடாத 10 நிகழ்வுகள் என்னென்ன தெரியுமா?
கல்லீரல் பிரச்சனையா? இந்த அறிகுறிகளை கவனிங்க!
தேங்காயில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..
ஆரஞ்சு ஜூஸை தினமும் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!