Bank Holidays : டிசம்பர் மாதத்தில் இந்த 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. பட்டியல் இதோ!

December | தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதம் மேற்குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இந்த 7 நாட்களில் எந்த வித வங்கி சார்ந்த திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றுகூறப்பட்டுள்ளது.

Bank Holidays : டிசம்பர் மாதத்தில் இந்த 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது.. பட்டியல் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

27 Nov 2024 11:06 AM

நவம்பர் மாதம் முடிவடைய உள்ள நிலையில் இன்னும் சில நாட்களில் டிசம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகள் செயல்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்தில் பொதுவான வார விடுமுறைகளை தாண்டி கூடுதலாக ஒரு நாள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த விடுமுறைகளை கணக்கில் கொண்டு தங்களது வங்கி சார்ந்த பணிகளை திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்று வங்கிகள் சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் எந்த எந்த நாட்களில் வங்கிகள் செயல்படாது என்பதுன் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Paytm : புதிய அம்சத்துடன் களமிறங்கிய பேடிஎம்.. இனி அனைத்திற்கும் “PIN” நம்பர் தேவையில்லை!

டிசம்பர் மாதம் வங்கி விடுமுறை பட்டியல்

  • டிசம்பர் 1 – டிசம்பர் 1 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 8 – டிசம்பர் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 14 – டிசம்பர் 14 ஆம் தேதி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்று, தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 15 – டிசம்பர் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 22 – டிசம்பர் 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 25 – டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 28 – டிசம்பர் 28 ஆம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால், அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Post Office FD : அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

பொதுமக்களுக்கு வங்கிகள் சார்பில் அறுவுரை 

தமிழகத்தில் வரும் டிசம்பர் மாதம் மேற்குறிப்பிட்ட நாட்களில் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட இந்த 7 நாட்களில் எந்த வித வங்கி சார்ந்த திட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, வங்கிகள் செயல்படும் மற்ற நாட்களில் பணிகளை திட்டமிடவும் அறிவுரை கூறப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இந்த தேதிகளில் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஏடிஎம், இண்டர்நெட் பேக்கிங் உள்ளிட்ட ஆன்லைன் சேவைகள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் பொதுமக்கள் அவற்றை தடையின்றி பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமககளுக்கான 3 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, ரூ.14 மற்றும் ரூ.21 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?

முக்கிய பங்கு வகிக்கும் வங்கி பயன்பாடு

முன்பெல்லாம் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பொதுமக்கள் வங்கிகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அனைத்தும் சுலபமாக மாறிவிட்டது. வீட்டில் இருந்தே ஆன்லைனில் ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சேவைகளை பெற முடியும். இருப்பினும் பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் வங்கிகளை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வங்கி கணக்கில் ஏதேனும் சிக்கல், பெயர் அல்லது முகவரி மாற்றம் செய்வது என சில சேவைகளை வங்கிக்கு சென்று செல்வதன் மூலம் அவற்றை சுலபமாக செய்து முடித்துவிடலாம். இதன் காரணமாக தற்போது பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் 7 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை சோபிதா துலிபாலாவின் சினிமா பயணம்..!
எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...
பாடகி ஜோனிதா காந்தியைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்!
உடலுக்கு தினமும் ஏன் புரதம் முக்கியம்..?