FD Interest Rate : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. தனியார் வங்கிகளின் அக்டோபர் மாத வட்டி விகிதம்!

Private | அக்டோபர் மாதம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அக்டோபர் மாதம் தனியார் வங்கிகள் வழங்கிய வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

FD Interest Rate : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. தனியார் வங்கிகளின் அக்டோபர் மாத வட்டி விகிதம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

31 Oct 2024 18:49 PM

நிலையான பொருளாதாரம், நிதி சிக்கல்கள் இல்லாத எதிர்காலம் ஆகியவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். சேமிக்கவில்லை என்றால், திடீரென ஏற்படும் நிதி பிரச்னைகள் மற்றும் சவால்களை சந்திப்பது மிகவும் சிரமமாகிவிடும். இதன் காரணமாக தான், அரசு மற்றும் தனியார் வங்கிகள் நல்ல லாபத்தை கொடுக்கும் அதிக வட்டியுடன் கூடிய சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், 1 ஆண்டுக்கான் நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு எந்த எந்த வங்கிகள் எவ்வளவு வட்டி வழங்குகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : நிலையான வைப்புநிதி திட்டம்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய வங்கிகள்!

1 ஆண்டுக்கான FD திட்டம் – வங்கிகளில் வட்டி விகிதங்கள்

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.25 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டு வழங்குகிறது.

பந்தன் வங்கி

பந்தன் வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 8.05 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.05 சதவீதம் வட்டு வழங்குகிறது.

சிட்டி யூனியன் வங்கி

சிட்டி யூனியன் வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.5 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டு வழங்குகிறது.

இதையும் படிங்க : Aavin : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு களைக்கட்டிய வியாபாரம்.. ரூ.115 கோடி வருமானம் ஈட்டிய ஆவின்!

சிஎஸ்பி வங்கி

சிஎஸ்பி வங்கி  நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.75 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 5 சதவீதம் வட்டு வழங்குகிறது.

டிஎஸ்பி வங்கி

டிஎஸ்பி வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.5 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7 சதவீதம் வட்டு வழங்குகிறது.

டிசிபி வங்கி

டிசிபி வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 8.05 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.1 சதவீதம் வட்டு வழங்குகிறது.

இதையும் படிங்க : Aadhaar : ஆதார் அட்டையை சான்றாக எடுக்க கூடாது.. உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய தீர்ப்பு.. முழு விவரம் இதோ!

ஃபெடரல் வங்கி

ஃபெடரல் வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.4 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.8சதவீதம் வட்டு வழங்குகிறது.

எச்டிஎஃப்சி வங்கி

எச்டிஎஃப்சி வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.4 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.6 சதவீதம் வட்டு வழங்குகிறது.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.25 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டு வழங்குகிறது.

இதையும் படிங்க : Small Savings : சிறுசேமிப்பு திட்டங்களில் சிறந்தது எது.. எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

ஐடிபிஐ வங்கி

ஐடிபிஐ வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.35 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.8 சதவீதம் வட்டு வழங்குகிறது.

ஐடிஎஃப்டி ஃபர்ஸ்ட் பேங்க்

ஐடிஎஃப்டி ஃபர்ஸ்ட் பேங்க் நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.75 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.5 சதவீதம் வட்டு வழங்குகிறது.

இண்டஸ்லேண்ட் வங்கி

இண்டஸ்லேண்ட் வங்கி நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிகப்படியாக 7.75 சதவீதம் வட்டி வழங்கும் நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டு வழங்குகிறது.

இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்.. பட்டியல் இதோ!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!