5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

FD Interest Rate : 7.15% வரை வட்டி.. பொதுத்துறை வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

Savings Scheme | சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நிதி பற்றாக்குறை அற்ற வாழ்க்கை மற்றும்  பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவற்றை பெற முடியும். எனவே அனைவரும் சேமிப்பதை வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் தான் பொதுமக்கள் சேமிப்பதற்காகவே பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

FD Interest Rate : 7.15% வரை வட்டி.. பொதுத்துறை வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 04 Nov 2024 19:15 PM

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நிதி பற்றாக்குறை அற்ற வாழ்க்கை மற்றும்  பாதுகாப்பான எதிர்காலம் ஆகியவற்றை பெற முடியும். எனவே அனைவரும் சேமிப்பதை வழக்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். இந்த நிலையில் தான் பொதுமக்கள் சேமிப்பதற்காகவே பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல பலன்களை பெற முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்று தான் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் அதிக லாபத்துடன் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்களை வழங்குகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்கள்.. தனியார் வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!

பொதுத்துறை வங்கிகளின் வட்டி விகிதங்கள்

பேங்க் ஆஃப் பரோடா

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி 6.85 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி 7.15 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி 6.80 சதவீதம் வட்டி வழங்குகிறது.

பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : FD Interest Rate : நிலையான வைப்புநிதி திட்டம்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய வங்கிகள்!

செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு செண்ட்ரல் பேங்க் ஆஃப் வங்கி 6.85 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு செண்ட்ரல் பேங்க் ஆஃப் வங்கி 6.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு செண்ட்ரல் பேங்க் ஆஃப் வங்கி 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கி

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி 6.80 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

இதையும் படிங்க : Small Savings : சிறுசேமிப்பு திட்டங்களில் சிறந்தது எது.. எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

யூனின் பேங்க் ஆஃப் இந்தியா

  • 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி  6.80 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 3 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 6.70 சதவீதம் வட்டி வழங்குகிறது.
  • 5 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News