Fixed Deposit : 3 ஆண்டுக்கான FD திட்டம்.. 9% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்! - Tamil News | These are the list of banks which provides highest interest rate for 3 years fixed deposit schemes | TV9 Tamil

Fixed Deposit : 3 ஆண்டுக்கான FD திட்டம்.. 9% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

Highest Interest Rate | பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும்.

Fixed Deposit : 3 ஆண்டுக்கான FD திட்டம்.. 9% வரை வட்டி வழங்கும் சிறு நிதி வங்கிகள்!

மாதிரி புகைப்படம் (Picture Credit : Unsplash )

Updated On: 

25 Oct 2024 11:11 AM

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 3 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும்  சிறிய நிதி நிறுவன வங்கிகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. 7.25% வரை வட்டி வழங்கும் வங்கிகள்!

ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி (AU Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஏயு ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.25% வட்டி வழங்கி வருகிறது.

ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Equitas Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஈக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.5% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8% வட்டி வழங்கி வருகிறது.

இஎஸ்ஏஎஃப் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (ESAF Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு இஎஸ்ஏஎஃப் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 6.75% வட்டி வழங்கி வருகிறது.

ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Jana Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.25% வட்டி வழங்கி வருகிறது.

நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி (North East Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு நார்த் ஈஸ்ட் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 9% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 9% வட்டி வழங்கி வருகிறது.

இதையும் படியும் : Ration Card : ரேஷன் கார்டில் இத்தனை வகைகள் இருக்கிறதா? உங்கள் கார்டு எந்த வகை என்று தெரிந்துக்கொள்ளுங்கள்!

சூர்யோதேய ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Suryoday Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு சூர்யோதேய ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.65% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.6% வட்டி வழங்கி வருகிறது.

உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Ujjivan Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு உஜ்ஜிவான் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.2% வட்டி வழங்கி வருகிறது.

யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Unity Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு யூனிட்டி ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 9% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.15% வட்டி வழங்கி வருகிறது.

இதையும் படிங்க : Richest Man of Asia : அதானி Vs அம்பானி.. ஆசியாவின் முதல் பணக்காரர் யார்.. ஃபோர்ப்ஸ் அறிக்கை கூறுவது என்ன?

உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி (Utkarsh Small Finance Bank)

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு உட்கர்ஷ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி அதிகபட்சமாக 8.25% வட்டி வழங்குகிறது. அதன்படி 3 ஆண்டுக்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 8.5% வட்டி வழங்கி வருகிறது.

புகைப்படங்களை சோதிக்க வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் - விரைவில் அறிமுகம்!
அவரைப் போல இருக்க வேண்டும் - நடிகை பார்வதியின் ஆசை
நயன்தாராவிற்கு சன் டிவியின் இந்த சீரியல் பிடிக்குமாம்
இரவில் டீ குடிப்பதால் இவ்வளவு பிரச்னையா?