Fixed Deposit : டாப் 5 FD திட்டங்கள்.. 1 ஆண்டு திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!
Top 5 FD Schemes | 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு 5 வங்கிகள் சிறந்த வட்டி வழங்குகின்றன. இந்த நிலையில், இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
பெரும்பாலான மக்கள் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். காரணம் இந்த திட்டத்தில் சிறந்த வட்டியுடன் கூடிய அதிக லாபம் வழங்கப்படுகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு இந்த திட்டத்தில் அதிக வட்டி வழங்கப்படுகிறது. எனவே அனைத்து தரப்பினரும் சேமிக்க இது சிறந்த திட்டமாக கருதப்படுவதால் அனைவரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்கும் 5 வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : நவம்பர் 15 முதல் கிரெடிட் கார்டுகளில் 15 மாற்றம்.. ஐசிஐசிஐ வங்கி விதிகள் என்ன தெரியுமா?
1 ஆண்டுக்கான FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்
பந்தன் வங்கியின் வட்டி விகிதம்
பந்தன் வங்கி தனது 1 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 8.05 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.830 வட்டியாக கிடைக்கும். நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.830 வட்டி இணைந்து ரூ.10,830 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உஷார்.. SBI வங்கி பெயரில் மோசடி.. தவிர்க்க இந்த 4 வழிகளை ஃபாலோ பண்ணுங்க!
இண்டஸ்லேண்ட் வங்கியின் வட்டி விகிதம்
இண்டஸ்லேண்ட் வங்கி தனது 1 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.75 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.798 வட்டியாக கிடைக்கும். நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.798 வட்டி இணைந்து ரூ.10,798 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ட்ரேடிங் பெயரில் நடக்கும் பெரிய மோசடி.. எச்சரிக்கை கொடுத்த செபி.. முழு விவரம்!
ஆர்பிஎல் வங்கியின் வட்டி விகிதம்
ஆர்பிஎல் வங்கி தனது 1 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.5 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.771 வட்டியாக கிடைக்கும். நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.771 வட்டி இணைந்து ரூ.10,771 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : FD Interest Rate : 7.15% வரை வட்டி.. பொதுத்துறை வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!
கர்நாடகா வங்கி வட்டி விகிதம்
கர்நாடகா வங்கி தனது 1 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.35 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.756 வட்டியாக கிடைக்கும். நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.756 வட்டி இணைந்து ரூ.10,756 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : FD Interest Rate : 1 முதல் 5 ஆண்டுகளுக்கான FD திட்டங்கள்.. தனியார் வங்கிகளின் நவம்பர் மாத வட்டி விகிதங்கள்!
எஸ் பேங்க் வட்டி விகிதம்
எஸ்பேங்க் தனது 1 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சுமார் 7.25 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.10,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். திட்டத்தின் முடிவில் உங்களுக்கு ரூ.745 வட்டியாக கிடைக்கும். நீங்கள் மூதலீடு செய்த தொகை ரூ.10,000 உடன் ரூ.745 வட்டி இணைந்து ரூ.10,745 ஆக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : FD Interest Rate : 1 ஆண்டுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. தனியார் வங்கிகளின் அக்டோபர் மாத வட்டி விகிதம்!
Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.