Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்! - Tamil News | These banks provides highest interest rate for 5 years fixed deposit schemes | TV9 Tamil

Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

Interest Rate | இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். குறிப்பாக மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய இது சிறந்த திட்டமாகும். காரணம் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது.

Fixed Deposit : எஸ்பிஐ முதல் ஐசிஐசிஐ வரை.. 5 ஆண்டுகளுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

28 Oct 2024 12:07 PM

பொதுமக்களின் நலனுக்காக, அதிக லாபத்துடன் கூடிய பல சேமிப்பு திட்டங்களை தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களில் ஒன்றுதான், FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வது நல்ல லாபத்தை பெற்று தரும். இந்த நிலையில் 5 ஆண்டு கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?

5 ஆண்டுகளுக்கான FD – அதிக வட்டி வழங்கும் வங்கிகள்!

மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். நிலையான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பான எதிர்காலம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். அந்த வகையில் பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். குறிப்பாக மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய இது சிறந்த திட்டமாகும். காரணம் இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : MSSC Scheme : பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

எஸ்பிஐ வங்கி வட்டி விகிதம்

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திடத்திற்கு, பொது குடிமக்களுக்கு எஸ்பிஐ வங்கி 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திடத்திற்கு எஸ்பிஐ வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் நேஷனல் வங்கி வட்டி விகிதம்

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திடத்திற்கு, பொது குடிமக்களுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி 6.50 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திடத்திற்கு பஞ்சாப் நேஷனல் வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

ஹெச்டிஎஃப்சி வங்கியின் வட்டி விகிதம்

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திடத்திற்கு, பொது குடிமக்களுக்கு ஹெச்டிஎஃப்சி வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திடத்திற்கு ஹெச்டிஎஃப்சி வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

ஐசிஐசிஐ வங்கி வட்டி விகிதம்

5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திடத்திற்கு, பொது குடிமக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி 7 சதவீதம் வட்டி வழங்குகிறது. இதேபோல, மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திடத்திற்கு ஐசிஐசிஐ வங்கி 7.50 சதவீதம் வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : SBI-ன் 444 நாட்களுக்கான FD Vs ICICI-ன் 15 மாதங்களுக்கான FD.. அதிக லாபம் வழங்கும் திட்டம் எது?

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

தனிப்பட்ட வளர்ச்சிக்கு தேவையான முக்கிய விஷயங்கள்!
சகோதரியிடம் உடன்பிறப்புகள் கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயங்கள்!
உடல் உழைப்பு இல்லையா.. அப்போ இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
உப்பு அதிகம சாப்பிடுவீங்களா? அப்போ இந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது