Fixed Deposit : HDFC முதல் SBI வரை.. FD-க்கு 7.90% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. முழு விவரம் இதோ! - Tamil News | these banks provides nearly 8 percentage interest rate for fixed deposit scheme | TV9 Tamil

Fixed Deposit : HDFC முதல் SBI வரை.. FD-க்கு 7.90% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. முழு விவரம் இதோ!

FD Interest Rate | இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். நிலையான வைப்புநிதி திட்டம் என்றால் என்ன, எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்வது சிறந்தது, வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் ஆகியவற்றை விரிவாக பார்க்கலாம். 

Fixed Deposit : HDFC முதல் SBI வரை.. FD-க்கு 7.90% வரை வட்டி வழங்கும் வங்கிகள்.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Published: 

27 Jul 2024 11:12 AM

நிலையான வைப்புநிதி : சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக அனைவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் நிலையான வைப்புநிதி. இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். நிலையான வைப்புநிதி திட்டம் என்றால் என்ன, எத்தனை ஆண்டுகள் முதலீடு செய்வது சிறந்தது, வங்கிகள் வழங்கும் வட்டி விகிதம் ஆகியவற்றை விரிவாக பார்க்கலாம்.

நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு 7.9% வரை வட்டி வழங்கும் வங்கிகள் மற்றும் திட்டங்களின் விவரங்கள்.

ஹெச்.டி.எஃப்.சி வங்கி

ஹெச்.டி.எஃப்.சி வங்கி 55 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பொதுமக்களுக்கு 7.40% வரை வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 7.90% வரை அதிகபட்ச வட்டியை வழங்குகிறது. ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் புதிய வட்டி முறைகள் ஜூலை மாதத்தில் இருந்து அமலுக்கு வந்துள்ளன.

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி

ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி  15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பொது மக்களுக்கு 7.20% வட்டி வழங்குகிறது. இதுவே மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்குகிறது. ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் திருத்தப்பட்ட வட்டி முறைகள் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளன.

இதையும் படிங்க : Mudra Loan : தொழில் தொடங்க வேண்டுமா? ரூ.10லட்சம் வரை கடன் வழங்கும் அரசு.. முழு விவரம் இதோ!

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி, 17 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பொது மக்களுக்கு அதிகபட்சமாக 7.20% வரை வட்டி வழங்குகிறது. இதேபோல 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான மூத்த குடிமக்களுக்குக்கான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது. ஆக்சிஸ் வங்கியின் திருத்தப்பட்ட வங்கி விகிதங்கள் ஜூலை முதல் அமலில் உள்ளன.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

எஸ்.பி.ஐ வங்கியில் புதிதாக தொடங்கப்பட்ட அம்ரித் விருஷ்டியின் பொது மக்களுக்கான 444 நாட்கள் வரையிலான நிலையான வைப்புநிதிக்கு 7.25% வரை வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : Bank Holidays: ஆகஸ்ட் மாதம் வங்கி செல்கிறீர்களா? 13 நாட்கள் விடுமுறை.. நோட் பண்ணிக்கோங்க..

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடா வங்கி, 399 நாட்கள் வரையிலான சிறப்பு நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.25% வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 7.75% வரை வட்டி வழங்குகிறது. இந்த மாற்றப்பட்ட வட்டி விகிதங்கள் ஜூலை முதல் அமலுக்கு வந்துள்ளன.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!