30 Oct 2024 22:26 PM
இந்த அக்டோபர் மாதத்தில் சில வங்கிகள் தங்களின் நிலையான வைப்புநிதி திட்டங்களின் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன. இந்த நிலையில், எந்த எந்த வங்கிகள் எவ்வளவு வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன என்பது குறித்து பார்க்கலாம்.
இண்டஸ்லேண்ட் வங்கி : இண்டஸ்லேண்ட் வங்கி தனது நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பொது முடிமக்களுக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 4% முதல் 8.25% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.75% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டியும் வழங்குகிறது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் : ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் தனது நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பொது முடிமக்களுக்கு 3% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில், 400 நாட்கள் முதல் 500 நாட்கள் வரையிலான திட்டத்திற்கு 7.75% வட்டி வழங்குகிறது.
பெடரல் வங்கி : பெடரல் வங்கி தனது நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பொது முடிமக்களுக்கு 3% முதல் 7.40% வரை வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.90% வரை வட்டி வழங்குகிறது. இந்த நிலையில் 777 நாட்களுக்கான FD திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.40% வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 7.90% வட்டியும் வழங்குகிறது.
பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி : பஞ்சாப் மற்றும் சிந்தி வங்கி தனது 555 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு பொது முடிமக்களுக்கு 8% வரை வட்டி வழங்குகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 555 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு 8.15% வரை வட்டி வழங்குகிறது.
பேங்க் ஆஃப் பரோடா : பேங்க் ஆஃப் பரோடா வங்கி பொது குடிமக்களுக்கான 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புநிதி திட்டங்களுக்கு 4.25% முதல் 7.30% வரை வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கு 4.75% முதல் 7.80% வரை வட்டி வழங்குகிறது. மேலும் மிக மூத்த குடிமக்களுக்கு 4.75% முதல் 7.90% வரை வட்டி வழங்குவது குறிப்பிடத்தக்கது.