5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

FD Scheme : 8.05% வட்டி.. நவம்பர் 30-க்குள் முடிவடையும் அசத்தல் திட்டங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!

Investment | நிலையான வைப்பு நிதி திட்டங்கள் வங்கிகள் மூலம் செயல்படுத்துவது மட்டுமின்றி, அஞ்சலகங்கள் மூலமும் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்தியன் வங்கி செயல்படுத்தி வரும் இரண்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம். 

FD Scheme : 8.05% வட்டி.. நவம்பர் 30-க்குள் முடிவடையும் அசத்தல் திட்டங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 29 Nov 2024 22:16 PM

பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வரும் நிலையில் பல்வேறு வங்கிகள் அதிக வட்டியுடன் கூடிய நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் இந்தியன் வங்கியும் பல பல சிறப்பு அம்சங்கள கொண்ட நிலையான வைப்பு நிதி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியன் வங்கி செயல்படுத்தி வரும் அதிக வட்டியுடன் கூடிய சில திட்டங்கள் வரும் நவம்பர் 30 ஆம் தேதி முதல் முடிவடைகிறது. இந்த திட்டத்திற்கு அதிகப்படியாக சுமார் 8.05 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. எனவே, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Ration Card : 5.8 கோடி ரேஷன் அட்டைகள் ரத்து.. டிசம்பர் 31-க்குள் இத பண்ணுங்க.. இல்லனா உங்க அட்டையும் ரத்து செய்யப்படலாம்!

அதிக லாபத்தை வழங்கும் நிலையான வைப்பு நிதி திட்டம்

பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் சிறந்து திட்டமாக கருதப்படுவது FD (Fixed Deposit) என்று அழைக்கப்படும் நிலையான வைப்பு நிதி திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் குறைந்த அளவு முதலே முதலீடு செய்ய முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெற முடியும். அதிக லாபம் வழங்கக்கூடிய சிந்து திட்டமாக இந்த திட்டம் விளங்குவதால் ஏராளமான மக்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். நிலையான வைப்பு நிதி திட்டங்கள் வங்கிகள் மூலம் செயல்படுத்துவது மட்டுமின்றி, அஞ்சலகங்கள் மூலமும் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் இந்தியன் வங்கி செயல்படுத்தி வரும் இரண்டு திட்டங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office FD : ரூ.6 லட்சம் முதலீடு செய்தால் ரூ.18 லட்சம் கிடைக்கும்.. முதலீட்டுக்கு 3 மடங்கு லாபம் தரும் அசத்தல் திட்டம்!

IND சுப்ரீம் 300 நாட்கள் திட்டம் (IND Supreme 300 Days)

இந்தியன் வங்கி IND சுப்ரீம் 300 நாட்கள் என்ற பெயரில் ஒரு சிறப்பு நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் பொதுமக்கள் குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் அதிகபட்சம் ரூ.3 கோடி வரை முதலீடு செய்யலாம். 300 நாட்களுக்கான இந்த நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் மிக மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

IND சுப்ரீம் 400 நாட்கள் திட்டம் (IND Supreme 400 Days)

இந்தியன் வங்கி IND சுப்ரீம் 400 நாட்கள் என்ற பெயரில் ஒரு சிறப்பு நிலையான வைப்பு நிதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.3 கோடி வரை முதலீடு செய்யலாம். 300 நாட்களுக்கான இந்த நிலையான வைப்பு நிதி திட்டத்தில் பொது குடிமக்களுக்கு 7.30 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதேபோல மூத்த குடிமக்களுக்கு 7.80 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் மிக மூத்த குடிமக்களுக்கு 8.05 சதவீதம் வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : SBI Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகளுக்கான FD.. ரூ.7, 14, 21 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News