Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்! - Tamil News | This post office scheme will help you to earn 31 lakhs by investing 1500 rupees | TV9 Tamil

Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

Saving Scheme | இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாத வாரியாக, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை என தங்களுக்கு விரும்பமான கால அளவீடுகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பிரீமியம் செலுத்துவதற்காக 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும்.

Post Office Scheme : ரூ.1,500 முதலீடு செய்தால் போதும்.. ரூ.31 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

கோப்பு புகைப்படம்

Published: 

23 Oct 2024 13:01 PM

சேமிப்பு திட்டங்கள் மக்களின் பொருளாதார நிலைத்தன்மையை பாதுகாக்க உதவுவதுடன், நிதி பற்றாக்குறையில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் உதவுகிறது. இவ்வாறு நிதி பாதுகாப்பை வழங்கும் திட்டங்களில் ஒன்றுதான் அரசின் அஞ்சலக சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் ரூ.1,500 முதலீடு செய்வதன் மூலம் ரூ.31 லட்சம் வருமானம் ஈட்டலாம். அரசின் இந்த குறிப்பிட்ட திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நீண்ட கால முதலீட்டில் நல்ல லாபம் பெற முடியும். அது என்ன திட்டம், அதில் எவ்வாறு முதலீடு செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Monthly Income Scheme : வட்டி மட்டும் ரூ.66,600.. அதிக லாபம் வழங்கும் அஞ்சலக மாத வருமான திட்டம்.. முழு விவரம் இதோ!

கிராம சுரக்‌ஷா யோஜனா சேமிப்பு திட்டம்

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க அரசு மற்றும் தனியார் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக கிராம சுரக்‌ஷா யோஜனா (Gram Suraksha Yojana) சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வயது வரம்பு மற்றும் முதலீட்டு தொகைக்கும் வரம்பும் உள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 7.75% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கு அதிக லாபம் வழங்கும் ஆக்சிஸ் வங்கியின் FD திட்டங்கள்!

கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

இந்த கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்வதற்கு வயது வரம்பு உள்ளது. அதாவது, இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பும் நபர்கள் 19 வயதுக்கு மேல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். 19 வயதுக்கு கீழ் உள்ளவர்களாலும், 55 வயதுக்கு மேல் உள்ளவர்களாலும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது. வயதை போலவே இந்த திட்டத்தில் முதலீட்டிற்கும் வரம்பு உள்ளது. அதன்படி, இந்த திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.

இதையும் படிங்க : FD Interest Rate : 10 ஆண்டுகள் வரையிலான FD திட்டங்கள்.. வட்டி விகிதங்களை அதிரடியாக உயர்த்திய ஆக்சிஸ் வங்கி!

முதலீடு செய்வதற்கான கால அளவு

இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் மாத வாரியாக, காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டுக்கு ஒருமுறை என தங்களுக்கு விரும்பமான கால அளவீடுகளை தேர்வு செய்து முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பிரீமியம் செலுத்துவதற்காக 30 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படும். ஒருவேளை இந்த திட்டத்தில் பயனர்கள் பாலிசி காலத்தை தவறவிட்டாலும் மீதமுள்ள பிரீமியத்தை செலுத்தி பாலிசியை புதுப்பித்துக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான FD திட்டம்.. அதிக வட்டி வழங்கும் 7 வாங்கிகள்.. பட்டியல் இதோ!

முதலீடு செய்வது எப்படி?

கிராம சுரக்‌ஷா யோஜனா சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு ஒவ்வொரு ரூ.1000-க்கும் ரூ.65 போனஸாக வழங்கப்படும். இந்த நிலையில் ஒருவர் தனது 19வது வயதில் கிராம சுரக்‌ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் 55 ஆண்டுகளுக்கு பிரீமியமாக ஒவ்வொரு மாதமும் ரூ.1,515 செலுத்த வேண்டும். இவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் 55 ஆண்டுகள் கழித்து முதலீட்டாளர்களுக்கு முதிர்வு தொகையாக ரூ.31.60 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : DA Hike : அகவிலைப்படி உயர்வால் ஊதியத்தில் ஏற்றம்.. யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்?

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

குழந்தைகள் பொய் சொல்ல காரணம் தெரியுமா?
பட்ஜெட்டில் பார்க்கக்கூடிய உலக நாடுகள் என்னென்ன தெரியுமா?
நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்க என்ன செய்யலாம்?