5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

Savings Scheme | அடிக்கடி உயரும் விலை வாசியின் காரணமாக, பாதுகாப்பான பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பலரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம்
Follow Us
vinalin
Vinalin Sweety | Updated On: 21 Aug 2024 12:25 PM

அஞ்சலக சேமிப்பு திட்டம் : எதிர்காலத்தை குறித்த பயம் அனைவருக்கும் இருக்கும். அதற்காக தான் அனைவரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். அடிக்கடி உயரும் விலை வாசியின் காரணமாக, பாதுகாப்பான பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பலரும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கான சிறப்பு சேமிப்பு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பணி ஓய்வுக்கு பிறகு, பொருளாதார ரீதியாக பிரச்னைகளை சந்திக்காத வகையில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்தகைய திட்டங்களில் ஒன்று குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!

மூத்த குடிமக்களுக்கான சிறப்பு திட்டம்

அஞ்சலகங்களில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக ஒரு சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது அவர்கள் தங்களின் பணி காலம் முடிந்த பிறகு நிதி சார்ந்த பிரச்னைகளில் இருந்து தப்பிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.20,500 வருமானம்

அஞ்சலங்கள் மூலம் இந்த மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.20,500 வருமானம் கிடைக்கும். இதனால் அவர்கள் தங்களின் ஓய்வு கால நிதி அபாயங்கள் குறித்து கவலைப்பட தேவையில்லை. பணி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமன்றி விஆர்எஸ் பெற்றவர்களும் இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போது இந்த சேமிப்பு திட்டத்திற்கு 8.2% வட்டி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Atal Pension Yojana : ரூ.7 செலுத்தினால் போதும்.. மாதம் ரூ.5,000 பெறலாம்.. அசத்தல் திட்டம்!

எவ்வளவு முதலீடு செய்யலாம்

  • மூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.10,250 வருமானமாக கிடைக்கும்.
  • இதுவே மூத்த குடிமக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்யும் போது, மாதம் ரூ.20,500 வருமானம் கிடைக்கும்.
  • இந்த திட்டத்தில் உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டு கிடைக்கும்.
  • அதன்படி காலாண்டிற்கு ரூ.61,500 வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News