FD Scheme : 1 ஆண்டுக்கும் குறைவான FD திட்டம்.. 7.05% வட்டி வழங்கும் வங்கி.. முதலீடு மற்றும் லாபம் குறித்த முழு விவரம் இதோ!

Investment | இந்தியன் வங்கி 300 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்குகிறது. அதன்படி, பொது குடிமக்களுக்கு 7.05 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீதம் வட்டியும் வழங்குகிறது.

FD Scheme : 1 ஆண்டுக்கும் குறைவான FD திட்டம்.. 7.05% வட்டி வழங்கும் வங்கி.. முதலீடு மற்றும் லாபம் குறித்த முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Updated On: 

08 Nov 2024 15:11 PM

FD என்று அழைக்கப்படும் நிலையான வைப்புநிதி திட்டத்தில் முதலீடு செய்ய, பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். ஏனென்றால் இந்த திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும் என்பதால், பொதுமக்கள் இந்த திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில், 1 ஆண்டுக்கும் குறைவான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.05 சதவீதம் வரை வட்டி வழங்கும் பொதுத்துறை வங்கி குறித்தும், அதன் FD திட்டத்திற்கான வட்டி விகிதங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : RBI : நிலையான வைப்புநிதி திட்டத்தில் இந்த தொகைக்கு மேல் முதலீடு செய்யாதீர்கள்.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

நிதி பாதுகாப்பை அளிக்கும் சேமிப்பு திட்டங்கள்

மனிதர்களின் வாழ்வில் சேமிப்பு என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம், சேமிப்பு இல்லை என்றால் எதிர்பாராத நிதி பற்றாக்குறை, நிதி நெருக்கடியில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படடும் வாய்ப்பு உள்ளது. எனவே, அனைவரும் கட்டாயம் நிதி தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். முதலீடு செய்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிதி சிக்கல்கள் அற்ற எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும். எனவே தான் தனியார் மற்றும் அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சிறந்த வட்டியுடன் அதிக லாபத்தை வழங்கும் திட்டங்கள்

அத்தகைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். அத்தகைய சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் FD எனப்படும் நிலையான வைப்புநிதி திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில், 1 ஆண்டுக்கும் குறைவான நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு 7.05 சதவீதம் வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கியின் வட்டி விகிதங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office RD : ரூ.7,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.4,99,564 பெறலாம்.. அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்!

300 நாட்களுக்கான FD திட்டம்

இந்தியன் வங்கி 300 நாட்கள் கால அளவீடு கொண்ட நிலையான வைப்புநிதி திட்டத்திற்கு சிறந்த வட்டி வழங்குகிறது. அதன்படி, பொது குடிமக்களுக்கு 7.05 சதவீதம் வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீதம் வட்டியும் வழங்குகிறது. இந்த சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் குறைந்த பட்சமாக ரூ.5,000 முதல் முதலீடு செய்யலாம். இதுவே அதிகபட்சமாக ரூ.3 கோடி வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முதலீடு செய்வது எப்படி

இந்தியன் வங்கியின் இந்த 300 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.5,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு பொது குடிமக்களுக்கு 7.05 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி, நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.5,000-க்கு 300 நாட்களுக்கு சேர்த்து ரூ.386 வட்டியாக கிடைக்கும். திட்டத்தின் முடிவில் அசல் மற்றும் வட்டி சேர்த்து ரூ.5,386 கிடைக்கும்.

இதையும் படிங்க : FD Interest Rate : டாப் 5 நிலையான வைப்புநிதி திட்டங்கள்.. 5 ஆண்டுகளுக்கான FD திட்டத்திற்கு அதிக வட்டி வழங்கும வங்கிகள்!

இதுவே, இந்தியன் வங்கியின் இந்த 300 நாட்களுக்கான நிலையான வைப்புநிதி திட்டத்தில் நீங்கள் அதிகபட்சமாக ரூ.1,00,000 முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்திற்கு 7.05 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், முதலீடு செய்த தொகை ரூ.1,00,000-க்கு 300 நாட்களுக்கு சேர்த்து ரூ.7,714 வட்டியாக கிடைக்கும். திட்டத்தின் முடிவில் அசல் மற்றும் வட்டி சேர்த்து ரூ.1,07,714 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்..!
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?