5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!

Investment Scheme | இந்த மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்பு திட்டத்தில், ஓய்வு பெற்றவர்கள் மட்டுமன்றி, வி.ஆர்.எஸ் எடுத்தவர்களும் முதலீடு செய்து பயன் பெறலாம். இந்த திட்டத்தை SCSS என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஒரே தவணையாக தான் செலுத்த முடியும்.

Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Published: 16 Oct 2024 16:38 PM

பொதுமக்கள் சேமிப்பதற்காக நிலையான வைப்புநிதி உள்ளிட்ட பல்வேறு சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றை விட அதிகமாக அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதைதான் பொதுமக்கள் விரும்புகின்றனர். காரணம், அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் சேமிப்பு திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்கள் பாதுகாப்பனவை மட்டுமன்றி அவற்றுக்கு அதிக வட்டி வழங்கப்படுவதால் பெரும்பாலான மக்கள் அவற்றில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்த நிலையில், மாதம் ரூ.20,500 வருமானம் வழங்கும் அஞ்சல சேமிப்பு திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : DA Hike : மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

சேமிப்பு ஏன் அவசியம்?

சேமிப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். பாதுகாப்பான எதிர்காலம், நிலையான பொருளாதாரம் ஆகிவற்றுக்காக ஒவ்வொருவரும் கட்டாயம் சேமிக்க வேண்டும். இதன் காரணமாகவே பொதுமக்கள் சேமிக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும். அப்படிப்பட்ட திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக சேமிப்பு திட்டம். இந்த திட்டத்தில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். இந்த நிலையில் மாதம் ரூ.20,500 வருமானமாக பெற உதவும் அஞ்சலக சேமிப்பு திட்டம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Bank of Baroda : FD-களுக்கான வட்டி விகிதத்தை அதிரடியாக உயர்த்திய பேங்க் ஆஃப் பரோடா.. எவ்வளவு தெரியுமா?

மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கும் அஞ்சலக சேமிப்பு திட்டம்

அஞ்சலங்களில் முதியவர்கள், பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஒவ்வொரு திட்டத்திற்கு ஒவ்வொரு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஓய்வூதியம் இல்லாத தனியார் துறைகளில் பணிபுரியும் நபர்கள் தங்களது ஓய்வு காலத்தில் மாத ஊதியம் பெற வேண்டும் என நினைத்தால் இந்த திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும்.

இதையும் படிங்க : Bob Utsav : அதிக வட்டியுடன் கூடிய புதிய FD திட்டத்தை அறிமுகம் செய்த பேங்க் ஆஃப் பரோடா.. சிறப்பு அம்சங்கள் என்ன?

முதியவர்களுக்கான 5 ஆண்டுகள் அஞ்சலக சேமிப்பு திட்டம்

இந்த மூத்த குடிமக்களுக்கான அஞ்சலக சேமிப்பு திட்டத்தில், ஓய்வு பெற்றவர்கள் மட்டுமன்றி, வி.ஆர்.எஸ் எடுத்தவர்களும் முதலீடு செய்து பயன் பெறலாம். இந்த திட்டத்தை SCSS என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தின் முதலீடு செய்ய வேண்டும் என்றால் ஒரே தவணையாக தான் செலுத்த முடியும். இந்த திட்டத்திற்கு அதிகப்படியாக 8.2% வட்டி வழங்கப்படுகிறது. தற்போது நடைமுறையில் உள்ள பல சேமிப்பு திட்டங்களை விட இந்த சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் அதிகமாகும். இந்த திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் மாதம் மாதம் ரூ.10,250 வருமானமாக பெறலாம். இதேபோல இந்த திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் முதலீடு செய்யும் பட்சத்தில் ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டியாக கிடைக்கும். இதன் மூலம் மாதம் ரூ.20,500 கிடைக்கும்.

இதையும் படிங்க : SBI Amrit Vrishti : எஸ்.பி.ஐ வழங்கும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு FD திட்டம்.. வட்டி மட்டும் 7.75%.. அம்ரித் விருஷ்டி குறித்த முழு விவரம் இதோ!

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

Latest News