5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupati : திருப்பதி லட்டுக்கும் இனி ஆதார் கார்டு கட்டாயம்.. தேவஸ்தானம் போர்டு அதிரடி!

Aadhaar Card | திருப்பதியில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், திருப்பதிக்கு வரும் பக்தர்கள் லட்டு வாங்க வேண்டும் என்றால் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, ஆதார் அட்டை இல்லையென்றால் லட்டு வழங்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tirupati : திருப்பதி லட்டுக்கும் இனி ஆதார் கார்டு கட்டாயம்.. தேவஸ்தானம் போர்டு அதிரடி!
மாதிரி புகைப்படம்
vinalin
Vinalin Sweety | Updated On: 18 Nov 2024 13:59 PM

ஆதார் கட்டாயம் : ஆதார் எண் ஒரு தனி நபர் அடையாளம் மட்டுமன்றி அத்தியாவசிய தேவையும் ஆகிவிட்டது. பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஆதார் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை  அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியில் சேறுவது முதல் மருத்துவமனை வரை, அனைத்து இடங்களிலும் முதன்மை ஆதாரமாக ஆதார் கேட்கப்படுகிறது. இந்நிலையில் திருப்பதியில், லட்டு வாங்குவதற்கும் தற்போது ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Aadhaar | செப்டம்பர் 14 ஆம் தேதிக்குள் இத பண்ணிடுங்க.. இல்லனா சிக்கல்!.. ஆதார் குறித்து வெளியான முக்கிய தகவல்!

திருப்பதியில் லட்டு வாங்க இனி ஆதார் கார்டு கட்டாயம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமன பக்தர்கள் வருகை புரிவது வழக்கம். அவ்வாறு வருகை புரியும் பக்தர்களுக்கு திருப்பதியில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலை போலவே இந்த லட்டும் பிரச்சி பெற்றது. இந்த லட்டை வாங்க திருப்பதியில் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், திருப்பதி லட்டு வாங்குவதற்கு தேவஸ்தானம் போர்டு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது, திருப்பதியில் லட்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஒருவருக்கு ஒரு லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படும் என்றும் அதற்கு மேல் லட்டு வாங்கும் பட்சத்தில் ஒரு லட்டுக்கு ரூ.50 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் இந்த அதிரடி மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : மூத்த குடிமக்களுக்கான FD.. 9.5% வரை வட்டியை வாரி வழங்கும் சிறு நிதி நிறுவனங்கள்.. முழு விவரம் இதோ!

ஆன்லைனில் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது எப்படி?

  • ஆன்லைனில் ஆதார் கார்டை டவுன்லோட் செய்ய முதலில் UIDAI-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அங்கு உங்களது ஆதார் எண்ணை என்டர்  செய்ய வேண்டும்.
  • நீங்கள் ஆதார் எண்ணை என்டர் செய்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்படும்.
  • அந்த ஓடிபியை பயன்படுத்தி நீங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.
  • பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து லேமினேட் செய்து வைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Post Office Scheme : மாதம் ரூ.20,500 வரை வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தல் அஞ்சலக சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி நீங்கள் ஆதார் கார்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Latest News