Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. வரி தாக்கல் முதல் அபராதம் வரை.. முழு விவரம் இதோ! - Tamil News | Today July 31 is the last date to file income tax for 2023 to 2024 financial year | TV9 Tamil

Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. வரி தாக்கல் முதல் அபராதம் வரை.. முழு விவரம் இதோ!

Updated On: 

31 Jul 2024 11:06 AM

Today is the last date | வருமான வரி செலுத்துவதற்கு ஓடிபி வெரிஃபிகேஷன் செய்யமுடியவில்லை என்று பலர் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஆக்ஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.. வரி தாக்கல் முதல் அபராதம் வரை.. முழு விவரம் இதோ!

மாதிரி புகைப்படம்

Follow Us On

வருமான வரி : 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், வருமான வரித்துறை அதற்கு மறுப்பு தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டது. அதுமட்டுமன்றி கடந்த ஜூலை 26 ஆம் தேதி நிலவரப்படி, சுமார் 5 கோடி வருமான வரி தாக்கல் செய்யப்பட்டதாகவும் இது மிகப்பெரிய சாதனை என்றும் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட சுமார் 8.5% என்று தெரிவித்திருந்தது.

காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை

வருமான வரி செலுத்துவதற்கு ஓடிபி வெரிஃபிகேஷன் செய்யமுடியவில்லை என்று பலர் புகார் தெரிவித்தனர். இதன் காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை ஆக்ஸ்ட் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அவ்வாறு காலக்கெடு எதுவும் நீட்டிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி தாக்கல் செய்வது எப்படி

  1. முதலில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய www.incometax.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  2. அதில் லாக் இன் செய்ய வேண்டும். இதில் லாக் இன் ஐடியாக உங்கள் ஆதார் அல்லது பான் கார்டு எண்ணை பயன்படுத்தலாம்.
  3. லாக் இன் செய்த பிறகு, e – file என்ற தேர்வை க்ளிக் செய்ய வேண்டும். அதில் file income tax return என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்பு வருடம் 2023 -24 என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
  4. ரூ.50 லட்சத்திற்கு குறைவாக ஊதியம் உள்ளவர்கள் ஐடிஆர் 1 ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.
  5. இதை பூர்த்தி செய்ய ஃபார்ம் 16, வீட்டு வாடகை ரசீது, எல்.ஐ.சி போன்ற ஆவணங்களை சரிபார்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  6. தேர்வு செய்து உள்ளே சென்ற உடன் 5 தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  7. அதாவது, Personal information, Gross total income, Total deductions, Tax Paid மற்றும் Total tax liability tab உள்ளிட்ட தகவல்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
  8. தகவல்களை பூர்த்தி செய்துவிட்டு வரியை இப்போது செலுத்துகிறீர்களா அல்லது பிறகு செலுத்துகிறீர்களா என்பதையும் தேர்வு செய்துக்கொள்ள வேண்டும்.
  9. இதற்கு பிறகு தகவல்களை சரிபார்த்துவிட்டு வருமான வரியை தாக்கல் செய்யலாம். இதை உறுதி செய்ய உங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Tax Free Countries : இந்த நாடுகளில் வருமான வரியே கிடையாது.. எந்த எந்த நாடுகள் தெரியுமா?

வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் என்ன ஆகும்

வருமான வரியை காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், நீங்கள் தானாகவே புதிய வரி விதிமுறைகளுக்கு கொண்டுவரப்படுவீர்கள். அதன்படி, அந்த நிதியாண்டுக்கான பழைய வரி விதிமுறையத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை இழப்பீர்கள். மேலும் தாமதமாக வருமான வரி செலுத்துவது, புதிய வரிமுறைக்கு கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரி தாக்கல் செய்யும்போது வரி முறையைத் தேர்வு செய்யும் உரிமை, வரி செலுத்துவோருக்கு உண்டு. எனவே காலக்கெடுக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் அந்த வாய்ப்பை இழக்க கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Airtel & Jio : போட்டி போட்டுக்கொண்டு ஆஃபர்களை அறிவிக்கும் ஜியோ மற்றும் ஏர்டெல்.. முழு விவரம் இதோ!

தாமதமாக வரி செலுத்துவதற்கான அபராதம்

வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F-ன் படி, தாமதமாக வரி தாக்கல் செய்வதற்கு கட்டணம் ரூ.5,000 வசூலிக்கப்படும். உங்கள் வருமானம் ரூ.5 லட்சத்திற்கு குறைவாக இருந்தால், தாமதமாக IRT தாக்கல் செய்யும் கட்டணம் ரூ.1,000 ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version