Share Market : தொடர் சரிவுகளுக்கு பிறகு உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன? - Tamil News | Today October 28 2024 Share Market starts with raise know more detail in Tamil | TV9 Tamil

Share Market : தொடர் சரிவுகளுக்கு பிறகு உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

Sensex and Nifty | கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவீதம் குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல BSE-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்து வர்த்தகம் நடைபெற்றது.

Share Market : தொடர் சரிவுகளுக்கு பிறகு உயர்வுடன் தொடங்கிய பங்குச்சந்தை.. இன்றைய நிலவரம் என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

28 Oct 2024 10:19 AM

கடந்த பல நாட்களாக இந்திய பங்குச்சந்தை கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், வாரத்தின் தொடக்க நாளான இன்று (அக்டோபர் 28) பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கியுள்ளது. கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி மட்டும் இந்திய பங்குச்சந்தை ரூ.6 லட்சம் கோடி இழப்பை சந்தித்த நிலையில், இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. பங்குச்சந்தை கடும் சரிவுகளுக்கு பின்பு உயர்வை சந்தித்துள்ள நிலையில், மூதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய பங்குச்சந்தை நிலவரம் என்ன, எந்த எந்த பங்குகள் உயர்வை சந்தித்துள்ளன, எவை சரிவை சந்தித்துள்ள என்பதை விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Fixed Deposit : எஸ்பிஐ Vs செண்ட்ரல் பேங்க்.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கி எது?

ஈரான் – இஸ்ரேல் போரால் கடும் பாதிப்பை சந்தித்த பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தையின் இந்த கடும் ஏற்ற, இறக்கத்திற்கு மத்திய கிழக்கு பிரச்னை ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. அதாவது கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடும் போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் மீது ஈரான் பயங்கர வான்வழி தாக்குதல் நடத்தியது. அதாவது ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏவுகனைகளை வீசி, இஸ்ரேலை நிலைகுலைய செய்தது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அது இரு நாடுகளுக்கும் இடையேயான நிலவி வந்த போரை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் என்றது.

இதையும் படிங்க : MSSC Scheme : பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ்.. ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்!

இதனால் கடும் கோபமடைந்த இஸ்ரேல், ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தியது. அதன்படி, காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட்டார். இது இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பகையை தீவிரமடைய செய்துள்ளது.

ஒரே நாளில் ரூ.9 லட்சம் கோடி சரிவை சந்தித்த பங்குச்சந்தை

இந்த நிலையில், கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி தலா 1 சதவீதம் குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல BSE-ன் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் 4 சதவீதம் வரை சரிந்து வர்த்தகம் நடைபெற்றது. அன்றைய முந்தைய அமர்வில் BSE-ல் பட்டியலிடப்பட்டிருந்த நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.453.7 லட்சம் கோடியாக இருந்த நிலையில், அடுத்த அமர்வில் அது ரூ.444.7 லட்சம் கோடியாக குறைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் அன்று ஒரு நாளில் ரூ.9 லட்சம் கோடியை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இதையும் படிங்க : Ration Shop : தீபாவளியை முன்னிட்டு சிறப்பு சலுகை.. ரேஷன் கடைகள் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!

இதேபோல கடந்த அக்டோபர் 26 ஆம் தேதியும் இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. அன்றைய தினம் மட்டுமே முதலீட்டாளர்கள் ரூ.6  லட்சம் கோடியை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய பங்குச்சந்தை நிலவரம்

இவ்வாறு கடும் சரிவுகளை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தை இன்று உயர்வுடன் தொடங்கியுள்ளது. அதன்படி இன்றைய வர்த்தக தொடக்கத்தில் S&P BSE சென்செக்ஸ் 343.70 புள்ளிகள் உயர்ந்து 79,745.99 ஆகவும், நிஃப்டி 50 66.05 புள்ளிகள் உயர்ந்து 24,246.85 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்றது.

உயர்வை சந்தித்த பங்குகள்

இன்றைய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கிய நிலையில், சில பங்குகளும் உயர்வை சந்தித்துள்ளன. அதன்படி, பிபிசிஎல் நிறுவனம் 2.79%, ஐசிஐசிஐ வங்கி 2.08%, எஸ்பிஐ வங்கி 1.63% உயர்வை சந்தித்துள்ளண.

இதையும் படிங்க : Fixed Deposit : 9.50% வரை வட்டி.. மூத்த குடிமக்களுக்கான FD-களுக்கு அதிக வட்டி வழங்கும் வங்கிகள்.. பட்டியல் இதோ!

சரிவை சந்தித்த பங்குகள்

இன்றைய பங்குச்சந்தை உயர்வுடன் தொடங்கிய நிலையில், சில பங்குகள் சரிவை சந்தித்துள்ளன. அதன்படி, ஓஎன்ஜிசி நிறுவனம் 1.17%, லார்சன் & டர்போ 1.14%, JSW ஸ்டீல் 1.01% மற்றும் ஈச்சர் மோட்டார்ஸ் 0.87% சரிவையும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உடல் உழைப்பு இல்லையா.. அப்போ இந்த பிரச்சனை வர வாய்ப்புள்ளது.
உப்பு அதிகம சாப்பிடுவீங்களா? அப்போ இந்த பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது
அதிகாலையில் சைக்கிளிங் செய்வதால் கிடைக்கும் பலன்கள்!
இந்த பிரச்சனைகள் இருந்தால் நிச்சயம் ஆப்பிள் பழம் சாப்பிடக்கூடாது..