8.20 சதவீதம் வரை வட்டி.. டாப் 4 போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்கள் தெரியுமா?
Post office schemes: இந்தியாவில் அஞ்சலக திட்டங்கள் மிக எளிதாக கிடைக்கின்றன. இதனை அஞ்சலகங்கள் அல்லது வங்கிகளில் கூட மிக எளிதாக தொடங்கலாம். அந்த வகையில், முதலீட்டுக்கு அதிகப்பட்சமாக 8.2 சதவீதம் வட்டி வழங்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
அஞ்சலக சேமிப்பு திட்டங்கள்: இந்திய அஞ்சலகங்களில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் உள்ளன. அதில் குறிப்பாக, பெண் குழந்தைகள் (சுகன்யா சம்ரித்தி), பெண் முதலீட்டாளர்கள் (மகிளா சம்மான்), மூத்த குடிமக்கள் (மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்), நீண்ட கால முதலீட்டாளர்கள் (பொது வருங்கால வைப்பு நிதி, கிசான் விகாஸ் பத்ரா, நேஷனல்) போன்றவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. இது தவிர அஞ்சலகங்கள், தனிநபர்களுக்கும் பல்வேறு ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்களை வழங்குகின்றன. இந்தத் திட்டங்கள் வெவ்வேறு காலத்தை அடிப்படையாக கொண்டவை ஆகும். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்களை காலாண்டுக்கு ஒருமுறை அரசாங்கம் மதிப்பாய்வு செய்கின்றன என்பதே. முன்னதாக நிதியமைச்சகம், “சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் 2024 அக்டோபர் 1 முதல் தொடங்கி டிசம்பர் 31, 2024 வரை மாறாமல் இருக்கும்” என அறிவித்துள்ளது.
தற்போது நாம், முதலீட்டுக்கு 8.2 சதவீதம் வரை வட்டி வழங்கும் 4 அஞ்சலக திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
வட்டி விகிதம் (அக்டோபர்-டிசம்பர், 2024)
- சுகன்யா சம்ரித்தி திட்டம் 8.2
- கிஷான் விகாஸ் பத்ரா 7.5
- மகிளா சம்மன் நிதி சான்றிதழ் 7.5
- தேசிய சேமிப்பு சான்றிதழ் 7.7
- மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் 8.2
- 5 ஆண்டு டைம் டெபாசிட் 7.5
மூத்தக் குடிமக்கள் சிறுசேமிப்பு திட்டம்
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்தத் திட்டத்தில் தற்போது அதிகப்பட்சமாக 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
குறைந்தப்பட்ச டெபாசிட்
இந்தத் திட்டத்தில் குறைந்தப்பட்ச முதலீடாக ரூ.1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அதிகப்பட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்துக் கொள்ளலாம். இதில் வழங்கப்படும் வட்டி விகிதமான 8.2 சதவீதம், டிசம்பர் 31, 2024ஆம் தேதி வரை அமலில் இருக்கும். அதன்பின்னர் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம் அல்லது அதே விகிதத்தில் தொடரலாம்.
இது நிதி அமைச்சகத்தின் கொள்கை முடிவை பொறுத்தது. எனினும், நீங்கள் முதலீடு செய்யும் போது என்ன வட்டி உறுதியளிக்கப்பட்டதோ அந்த வட்டி இறுதிவரை வழங்கப்படும்.
5 ஆண்டு டைம் டெபாசிட்
5 ஆண்டு கால அஞ்சலக நேர வைப்புத்தொகையின் கீழ் முதலீடு வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80சி இன் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இதில் குறைந்தப்பட்ச முதலீடு ரூ.1,000 ஆகும். 2024 அக்டோபர்-டிசம்பர் காலாண்டிற்கான 5 ஆண்டு கால வைப்புத்தொகைக்கு 7.5% வட்டி விகிதத்தை கிடைக்கும்.
இதையும் படிங்க : இவ்ளோ கம்மி விலையில் ஹோம் லோனா? நீங்க வீடு வாங்குவது சத்தியம்!
தேசிய சேமிப்பு சான்றிதழ்
தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது ஃபிக்ஸட் டெபாசிட் மற்றும் வரிச் சலுகைகளை வழங்கும் மத்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைகள் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் விலக்கு பெற தகுதியுடையவை ஆகும். இந்தத் திட்டத்தில் 7.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.
மகிளா சம்மன் சேமிப்பு நிதி
மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டம் முதலீடு தொடங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, முதிர்ச்சியடையும். இந்தத் திட்டத்தில் ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்தத் திட்டத்தில் 7..5 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா
சுகன்யா சம்ரித்தி யோஜனா என்பது இந்தியாவில் பெண் குழந்தைகளின் பெற்றோருக்கான மத்திய அரசின் சேமிப்பு திட்டமாகும். இது பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகைகள் வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் விலக்கு பெற தகுதியுடையவை ஆகும். வருமான வரிச் சட்டத்தின் கீழ் சம்பாதித்த வட்டிக்கு வரி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ரூ.100 இருக்கா? லட்சங்களில் ரிட்டன்.. டாப் ப்ளெக்ஸி கேப் ஃபண்டுகள் ரெடி!