Aadhaar Update : இலவச ஆதார் திருத்தம்.. அவகாசத்தை நீட்டித்த UIDAI.. எப்போது வரை தெரியுமா?
UIDAI | ஆதார் கார்டு இந்தியர்களின் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக உள்ள நிலையில் அதில் இருக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சில முக்கிய வேலைகளை மேற்கொள்ள முடியாத சிக்கல் ஏற்படும். இந்த நிலையில், ஆதார் கார்டு குறித்து UIDAI ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணமாக ஆதார் அட்டை உள்ள நிலையில், அதில் உள்ள விவரங்கள் சரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆதார் அட்டை குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இலவசமாக ஆதார் விவரங்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீடித்துள்ளது. இந்த நிலையில், ஆதார் விவரங்களை புதுப்பிக்க எவ்வளவு நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, ஆன்லைனில் ஆதார் விவரங்களை சுலபமாக புதுப்பிப்பது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : Farmer Loan : விவசாயிகளுக்கான உத்தரவாதம் இல்லா வங்கி கடன்.. ரூ.2 லட்சமாக உயர்த்தி அறிவித்த ஆர்பிஐ!
கால அவகாசத்தை நீட்டித்த UIDAI
ஆதார் அட்டை எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு ஆதார் அட்டையில் உள்ள விவரங்களும் முக்கியம். ஆதார் அட்டையில் உள்ள விவரங்கள் தவறாக இருந்தால் பல வேலைகளை செய்ய முடியாத சூழல் ஏற்படலாம். எனவே, ஆதார் அட்டையை பிழையில்லாமல் வைத்திருப்பது முக்கியமாகும். அதுமட்டுமன்றி, ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதாரில் உள்ள விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் கூறுகிறது.
ஜூன் 14,2025 வரை அவகாசம்
அவ்வாறு, ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை இலவசமாக புதுப்பிக்க கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி கடைசி தேதி UIDAI அறிவித்திருந்தது. அவ்வாறு 14 ஆம் தேதிக்குள் ஆதார் விவரங்களை புதுப்பிக்கவில்லை என்றால் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில், ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பித்துக்கொள்வதற்கான கால அவகாசத்தை ஜூன் 14, 2025 வரை நீடித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : RBI : 500 ரூபாய் நோட்டுக்கள் குறித்து புதிய வழிமுறைகளை வெளியிட்ட ரிசர்வர் வங்கி.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
ஆதார் விவரங்களை ஆன்லைனில் திருத்துவது எப்படி
- ஆதார் விவரங்களை திருத்த முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அங்கு, ஆதார் எண் மற்றும் ஓடிபியை பயன்படுத்தி உள் நுழைய வேண்டும்.
- பிறகு “Proceed to Update Address” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு உங்களின் புதிய வீட்டு முகவரி மற்றும் அதற்கான சான்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேற்கண்ட நடைமுறைகளை பின்பற்றி ஆன்லைனில் சுலபமாக ஆதார் விவரங்களை புதுப்பித்துக்கொள்ளலாம். விவரங்களை பதிவு செய்த பிறகு உங்களின் மொபைல் எண்ணுக்கு URN எண் அனுப்பி வைக்கப்படும் அதை பயன்படுத்தி விவரங்கள் புதுப்பிக்கப்பட்டதா என்பதை நீங்கள் சோதனை செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.