5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Unified Pension Scheme: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன? யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரும் 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் என 3 அம்சங்கள உறுதி செய்யப்படுகின்றன.

Unified Pension Scheme: ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் என்றால் என்ன?  யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும்? முழு விவரம்!
பெஷ்ன் திட்டம்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Aug 2024 09:07 AM

ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம்:  தற்போது இரண்டு வகையான ஓய்வூதியம் நடைமுறையில் உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டம் என இரண்டு நடைமுறையில் உள்ளன. இத்தகைய சூழலில் தான் புதிய ஓய்வூதிய திட்டம், பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த யுபிஎஸ் எனும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரும் 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் என 3 அம்சங்கள உறுதி செய்யப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 23 லட்சம் பேர் பயனடைவார்கள். அதே நேரத்தில் மாநில அரசுகளும் யுபிஎஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்பட உள்ளது. அவ்வாறு இத்திட்டததை மாநில அரசுகளும் தேர்வு செய்யும்பட்சத்தில், பயனாளிகளின் எண்ணிக்கை 90 லட்சமாக இருக்கும்.

Also Read:  மாதம் ரூ.2,000 முதலீடு செய்தால் போதும்.. ரூ.6.50 லட்சம் வரை வருமான ஈட்டலாம்.. பிபிஎஃப் முதலீடு!

யாருக்கு எவ்வளவு பென்ஷன் கிடைக்கும்?

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் ஒருவர் 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறுவோர்களுக்கு சராசரி அடிப்படையில் ஊதியத்தில் இருந்து 50 சதவீதம் ஓய்வூதியமாக அளிக்கப்படும். பணி ஓய்வுக்கு பிறகு அரசு ஊழியர் உயிரிழக்கும் நிலையில், குடும்ப உறுப்பினருக்கு ஓய்வூதியத்தில் 60 சதவீதம் குடும்ப ஓய்வூதியம் அளிக்கப்படும். மேலும், யுபிஎஸ் திட்டத்தில் சேர குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணிக்காலம் இருக்க வேண்டும். அவ்வாறு குறைந்தபட்ச 10 ஆண்டுகள் பணியில் இந்து ஓய்வு பெறுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பென்ஷன் திட்டத்திற்கும் இதற்கும் உள்ள வேறுபாடு:

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதிய திட்டம் அல்லது தேசிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளனர். இவர்கள் இந்த ஒருங்கிணைந்த ஓய்வு திட்டத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்படும். ஏற்கனவே தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பவர்களுக்கும், யுபிஎஸ் திட்டத்துக்கு மாறுவதற்கான வாய்ப்பும் அளிக்கப்பட உள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள புதிய ஓய்வூதியத் திட்டம் 2004ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் இரண்டு அடுக்குகள் உள்ளன. அதாவது, ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னரே பணத்தை எடுக்க முடியும். மற்றொன்று முன்கூட்டியே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் ஓய்வூதியத்திற்காக கொடுக்க வேண்டும்.

Also Read: வருமான வரி ரீஃபண்ட் இன்னும் வரவில்லையா.. அப்போ இத கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

இதில் அரசின் பங்களிப்பு 14 சதவீமாக இருக்கிறது. இதில் ஓய்வு பெறும்போது மொத்த தொகையில் 60 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். புதிய ஓய்வூதிய திட்டத்தில் ரூ.1.50 லட்சம் வரை சேமிப்புக்கு வருமான வரிச் சட்டம் 80சி இன் கீழ் வரி விலக்கு அளிக்கப்படும். அதேபோல கூடுதலாக ரூ.50 ஆயிரம் சேமிப்புக்கு 80சிசிடி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News