Budget 2024 Highlights : மத்திய பட்ஜெட் 2024.. இன்றைய அறிவிப்புகள் முழு விவரம்! - Tamil News | Union Budget 2024-25 session live updates in parliament today budget announcements Nirmala Sitharaman budget speech latest news in Tamil | TV9 Tamil

Budget 2024 Highlights : மத்திய பட்ஜெட் 2024.. இன்றைய அறிவிப்புகள் முழு விவரம்!

Updated On: 

23 Jul 2024 14:13 PM

Budget Session 2024 Parliament Highlights: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைக்க உள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார். ஒவ்வொரு நொடியும் பட்ஜெட் பற்றிய தகவல்கள் டிவி 9 தமிழில் கிடைக்கும்.

Budget 2024 Highlights : மத்திய பட்ஜெட் 2024.. இன்றைய அறிவிப்புகள் முழு விவரம்!

நிர்மலா சீதாராமன்

Follow Us On

மத்திய பட்ஜெட் : மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து இன்று (ஜூலை 23) 2024-25 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைக்க உள்ளார். இன்று அவர் நிகழ் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் இந்தச் சாதனையை நிகழ்த்தவுள்ளார். இதன்மூலம் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார். ஒவ்வொரு நொடியும் பட்ஜெட் பற்றிய தகவல்கள் டிவி 9 தமிழில் கிடைக்கும். மேலும் நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது சன்சாத் (Sansad) தொலைக்காட்சியிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். இது துர்தஷனிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும். நிதியமைச்சரின் பேச்சு சன்சாத் டிவி மற்றும் துர்தஷன் ஆகிய யூடியூன் சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Jul 2024 01:28 PM (IST)

    பட்ஜெட் நிறைவு

    மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்து முடித்தார். இளைஞர்கள், பெண்கள், வரி விதிப்பு மாற்றம், ஏஞ்சல் வரி ரத்து, தங்கம் – வெள்ளி வரி குறைப்பு என பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். மத்திய அரசின் இந்த பட்ஜெட்டுக்கு எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

  • 23 Jul 2024 01:27 PM (IST)

    ஏமாற்றம் தரும் பட்ஜெட்: மாயாவதி

    நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பழைய பாணியில் ஒருசில பணக்காரர்கள் மற்றும் பணக்காரர்களுக்கானது என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.  நாட்டில் நிலவும் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், பின்தங்கிய நிலை, 125 கோடிக்கும் அதிகமான நலிந்த பிரிவினரின் மேம்பாடு மற்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் போன்றவற்றுக்கு தேவையான சீர்திருத்த கொள்கையும் நோக்கமும் இந்த புதிய அரசிடம் இல்லை என்றார்


  • 23 Jul 2024 12:56 PM (IST)

    Income Tax Budget : பழைய வருமான வரியில் மாற்றமில்லை

    Income Tax Budget : பழைய வருமான வரி நடைமுறையில் எந்த மாற்றமும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை.

  • 23 Jul 2024 12:54 PM (IST)

    Income Tax Budget : புதிய வரிமுறை அறிவிப்பு!

    Income Tax Budget : ரூ.3 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு எந்த வரியும் விதிக்கப்படவில்லை. ரூ.3 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 5% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.7 லட்சம் முதல் ரூ.10 வரை வருவாய் ஈட்டுவோருக்கு 10% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 15% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு 20% வரி விதிக்கப்பட்டுள்ளது. ரூ.15 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோருக்கு 30% வரி விதிக்கப்பட்டுள்ளது.

  • 23 Jul 2024 12:48 PM (IST)

    Income Tax Budget : ரூ.17,500 சலுகை கிடைக்கும்

    Budget 2024-25 : புதிய முறையில் வரி செலுத்துவோர்க்கு தற்போதைய சலுகை மூலம் ரூ.17,500 சலுகை கிடைக்கும் என்று பெட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது

  • 23 Jul 2024 12:46 PM (IST)

    Income Tax Budget : 20% முதல் 30% வரை வரி

    Budget 2024-25 :ரூ.12,00,000 முதல் ரூ.15,00,000 வரை வருவாய் ஈட்டுவோர்க்கு 20% வரியும், ரூ.15,00,000-க்கு மேல் வருவாய் ஈட்டுவோர்க்கு 30% வரியும் வசூலிக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இதேபோல ரூ.7,00,000 முதல் ரூ.10,00,000 வரை வருவாய் ஈட்டுவோர்க்கு 10% வரியும், ரூ.10,00,000 முதல் ரூ.12,00,000 வரை வருவாய் ஈட்டுவோர்க்கு 15% வரியும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

  • 23 Jul 2024 12:44 PM (IST)

    Income Tax Budget : 20% முதல் 30% வரை வரி

    Budget 2024-25 : ரூ.12,00,000 முதல் ரூ.15,00,000 வரை வருவாய் ஈட்டுவோர்க்கு 20% வரியும், ரூ.15,00,000-க்கு மேல் வருவாய் ஈட்டுவோர்க்கு 30% வரியும் வசூலிக்கப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:40 PM (IST)

    Income Tax Budget : ரூ.3 முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர்க்கு 5% வரி

    Budget 2024-25 : ரூ.3,00,000 முதல் ரூ.7,00,000 வரை வருவாய் ஈட்டுவோர்க்கு 5% வரி என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரூ.3,00,000 லட்சத்திற்குள் வருவாய் ஈட்டுவோர்க்கு வரி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  • 23 Jul 2024 12:38 PM (IST)

    Business Budget 2024 : நிலையான கழிவு ரூ.75,000 ஆக அதிகரிப்பு

    Budget 2024-25 : தனிநபர்களுக்கான வருமான வரிச்சலுகையில் நிலையான கழிவு ரூ.75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:35 PM (IST)

    Business Budget 2024 : ஏஞ்சல் டாக்ஸ் ரத்து

    Budget 2024-25 : முதலீட்டாளர்களுக்கான ஏஞ்சல் டாக்ஸ் ரத்து செய்யப்படுவதாக பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் அனைத்து வகையான ஏஞ்சல் டாக்ஸ் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:33 PM (IST)

    Business Budget 2024 : மூலதன ஆதாய வரி விதிப்பு

    Budget 2024-25 : குறிப்பிட்ட சில முதலீடுகளுக்கு 20% குறுகிய மூலதன ஆதாய வரி விதிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:30 PM (IST)

    Business Budget 2024 : ஆன்லைன் வர்த்தகத்திற்கான TDS குறைப்பு

    Budget 2024-25 : ஆன்லைன் வர்த்தகத்திற்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:25 PM (IST)

    Health Budget 2024 : மருந்துகளுக்கு சுங்கவரி குறைப்பு

    Budget 2024 -25 : 3 வகையான புற்றுநோய் மருந்துகளுக்கு சுங்கவரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:21 PM (IST)

    Business Budget 2024 : தங்கம், வெள்ளிக்கு அதிரடி வரி குறைப்பு

    Union Budget 2024 -25 : தங்கம் மற்றும் வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதேபோல பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

  • 23 Jul 2024 12:18 PM (IST)

    Income Tax Budget 2024 : வருமான வரி தொடர்பான அறிவிப்பு

    Union Budget 2024 -25 : வருமான வரி தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் நிர்மலா சீதாராமன்.

  • 23 Jul 2024 12:16 PM (IST)

    Business Budget 2024 : தங்கம், வெள்ளிக்கு வரி குறைப்பு

    Union Budget 2024 -25 : தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதிக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:14 PM (IST)

    Electronics Budget 2024 : செல்போன், செல்போன் உதிரி பாகங்களுக்கு வரி குறைப்பு

    Union Budget 2024 -25 : செல்போன், செல்போன் உதிரி பாகங்கள் மற்றும் சார்சஜ் உள்ளிடவைக்கு 15% வரை வரி குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:11 PM (IST)

    Research Budget 2024 : விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி

    Union Budget 2024 -25 : விண்வெளி சார்ந்த திட்டங்களுக்கு ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:06 PM (IST)

    Business Budget 2024 : ஜன்விஷ்வாஷ் மசோதா 2.0

    Union Budget 2024 -25 : தொழில் தொடங்குவதை எளிதாக்க ஜன்விஷ்வாஷ் 2.0 மசோதா கொண்டுவரப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:04 PM (IST)

    Infrastructure Budget 2024 : உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.1.5 லட்சம் கோடி

    Union Budget 2024 -25 : உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் வழங்க ரூ.1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்தியன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 12:00 PM (IST)

    Budget 2024 : பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை

    Union Budget 2024 -25 : அதிக பத்திரப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் பத்திரப்பதிவு கட்டணத்தை குறைக்க வலியுறுத்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:56 AM (IST)

    Employment Budget 2024 : வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டிற்கு ரூ.1,48,000 கோடி

    Union Budget 2024 -25 : இளைஞர்களுக்கு பேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடுகளை அளிக்க ரூ.1,48,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:52 AM (IST)

    Rural development Budget 2024 : ஊரக வளர்சிக்கு ரூ.2,66,000 கோடி

    Union Budget 2024 -25 : ஊரக வளர்சிக்கு ரூ.266,000 லட்சம் நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:37 AM (IST)

    Women Empowerment Budget 2024 : பெண்கள், பெண் குழந்தைகள் திட்டங்களுக்கு ரூ.3,00,000 கோடி ஒதுக்கீடு

    Union Budget 2024 -25 : பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.3,00,000 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:34 AM (IST)

    Agriculture Budget 2024 : வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

    Union Budget 2024 -25 : வேளாண் துறைக்கும் ரூ.1.52 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:31 AM (IST)

    3 கோடி இலவச வீடுகள்

    Union Budget 2024 -25 : பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் சுமார் 3 கோடி புதிய இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என்று பட்ஜெட் உரையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிபிட்டுள்ளார்.

  • 23 Jul 2024 11:29 AM (IST)

    Women Empowerment Budget 2024 : பெண்களுக்கு ஹாஸ்டல் – நிர்மலா சீதாராமன்

    Union Budget 2024 -25 : நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:26 AM (IST)

    20,00,000 மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி

    Union Budget 2024 -25 : இந்தியாவில் சுமார் 20,00,000 மாணவர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:24 AM (IST)

    மாணவர்களுக்கு ரூ.10,00,000 வரை கல்வி கடன்

    Union Budget 2024 -25 : அரசின் எந்த திட்டங்களின் கீழும் பயன்பெறாத மாணவர்களுக்கு ரூ. 10,00,000 வரை கல்வி கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:21 AM (IST)

    Agriculture Budget 2024 : கிசான் கிரெடிட் கார்டு அறிமுகம்

    Union Budget 2024- 25: கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் கட்டாயமாக அறிமுகப்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:17 AM (IST)

    4 பிரிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்

    Union Budget 2024 -25: இடைக்கால பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளபடி, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:14 AM (IST)

    Agriculture Budget 2024 : பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா நீட்டிப்பு

    Union Budget 2024- 25 : பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:11 AM (IST)

    அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் – நிர்மலா

    Union Budget 2024-25 : இந்தியாவில் பண வீக்கம் 4% ஆக உள்ளது. மக்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எங்கள் கொள்கையில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்தியாவின் பொருளாதாரம் ஒளிர்கிறது என்று நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 11:03 AM (IST)

    நிர்மலா சீதாராமன் பட்ஜெட் முன்னுறை

    Union Budget 2024-25 : 2024-25 ஆம் ஆண்டுகான பெட்ஜெட்டின் முன்னுறையை நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார் நிர்மலா சீதாராமன்.

  • 23 Jul 2024 10:42 AM (IST)

    இன்னும் சற்று நேரத்தில் தாக்கலாகிறது மத்திய பெட்ஜெட்

    Union Budget 2024-25 : 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சரியாக காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  • 23 Jul 2024 10:33 AM (IST)

    நாடாளுமன்றத்திற்கு வருகை புரியும் அமைச்சர்கள்

    Union Budget 2024-25 : மத்திய பட்ஜெட் (2024-25) இன்னும் சற்றும் நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமைச்சர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.

  • 23 Jul 2024 09:32 AM (IST)

    மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி குற்றச்சாட்டு

    Union Budget 2024-25  : மத்திய பெட்ஜெட் மூலம் தனக்கு நெருக்கமாக இருக்கும் கோடீஸ்வரர்களுக்கு பிரதமர் உதவுவார். நடுத்தர வர்கத்தினருக்கும், நேர்மையாக வரி செலுத்துவோருக்கும் வெற்று வாக்குறுதிகளை தவிர வேறு எதுவும் கிடைக்காது என்று காங்கிரஸ் எம்.பி.கவுரவ் கோகோய் கருத்து தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 09:22 AM (IST)

    பட்ஜெட் உடன் குடியரசு தலைவரை சந்திக்கும் நிர்மலா சீதாராமன்

    Union Budget 2024-25  : சிவப்பு நிற வெல்வெட் பெட்டியில் வைக்கப்பட்ட பட்ஜெட் உடன், குடியரசு தலைவரை சந்திக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  • 23 Jul 2024 09:00 AM (IST)

    “பட்ஜெட்டில் எதையும் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம்”

    Union Budget 2024-25 : இந்த பட்ஜெட் 3 முதல் 4 மாதங்களுக்கான பட்ஜெட் என்பதால் பெரிய அறிவிப்புகள் எதுவும் இருக்காது என மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பட்ஜெட்டில் பெரிதாக எதிர்பார்க்க வேண்டாம் என்றும் நீண்டகால FD-களின் வங்கி வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  • 23 Jul 2024 08:51 AM (IST)

    நிதி அமைச்சகம் வந்தடைந்தார் நிர்மலா சீதாராமன்

    Union Budget 2024-25 : காலை 11 மணிக்கும்  நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ள நிலையில், சற்று முன் நிதி அமைச்சகம் வந்தடைந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

  • 23 Jul 2024 08:40 AM (IST)

    1 மணி நேரம் உரையாற்ற உள்ள நிதியமைச்சர்

    காலை 8.45 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறும் நிர்மலா சீதாராமன், 9 மணிக்கு அதிகாரிகளை சந்திக்க உள்ளார். பிறகு 9.30 மணிக்கு ராஷ்டிரபதி பவனுக்கு நிதியமைச்சர் வருகை தர உள்ளார். அதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்குள் அமைச்சரவையின் ஒப்புதலை பெற உள்ளார். பிறகு சரியாக காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். அவரது பட்ஜெட் உரை சுமார் 45 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

  • 23 Jul 2024 08:10 AM (IST)

    மாத சம்பளம் வர்க்கம்

    Union Budget 2024-25 : இந்த பட்ஜெட்டில பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களுக்கு மட்டுமின்றி தனிநபர்கள் குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர்களுக்கு இந்த பட்ஜெட் மிக முக்கியமானதாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

  • 23 Jul 2024 08:04 AM (IST)

    பட்ஜெட் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வருமா?

    PM-AASHA திட்டத்திற்கு கூடுதல் பட்ஜெட் கொடுக்கப்படலாம் என எதிர்பார்ப்பு. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றின் முழுமையான கொள்முதல் குறித்து அறிவிப்பு வரலாம்

  • 23 Jul 2024 07:45 AM (IST)

    அரசின் முன் உள்ள சவால்கள் என்ன?

    Union Budget 2024-25 : பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே, இம்முறை பட்ஜெட் 2047க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக முன்வைப்பதில் கவனம் செலுத்தும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் தற்போது அரசாங்கத்தின் முன் பல சவால்கள் உள்ளன. தனிப்பட்ட நுகர்வு செலவினங்களில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்ட, பொது மக்களின் கைகளில் அதிக பணம் கொடுக்கப்பட வேண்டும். இதற்கு அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

  • 23 Jul 2024 07:31 AM (IST)

    பிஎம் கிசான் உதவித்தொகை

    Union Budget 2024-25 : பிஎம் கிசான் திட்டத்தில் உதவித்தொகை உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் இன்றைய பட்ஜெட்டின் மீது உள்ளது

  • 23 Jul 2024 07:12 AM (IST)

    வரி எதிர்பார்ப்புகள்

    Union Budget 2024-25  : வரியில் எதிர்பார்க்கப்படும் சில விஷயங்கள்

    • அடிப்படை விலக்கு வரம்பை ரூ.3,00,000-ல் இருந்து ரூ.5,00,000 ஆக உயர்த்த வாய்ப்புள்ளது.
    • வரி விகிதங்கள் குறைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
    • வரி அடுக்குகளில் மறுசீரமைப்பு குறைக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கபப்டுகிறது.
  • 23 Jul 2024 07:11 AM (IST)

    கடந்த ஆண்டு பட்ஜெட்

    Union Budget 2024-25 : கடந்த ஆண்டு (2022- 2023) பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய அம்சங்கள்

    1. அடிப்படை விலக்கு வரம்பு ரூ.2,50,000-ல் இருந்து ரூ.3,00,000 ஆக உயர்த்தப்பட்டது.

    2. அதிகபட்ச கூடுதல் கட்டணத்தை 25%-க்குள் அடைத்தல்.

    3. ரூ.50,000 நிலையான விலக்கு

    4. வரி அடுக்குகளின் மறுசீரமைப்

  • 23 Jul 2024 07:10 AM (IST)

    பிரத்யேக திட்டங்கள் வருமா?

    Union Budget 2024-25 : பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பிரத்யேக திட்டங்களும், வரி சலுகைகளும் இடம்பெறும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  • 23 Jul 2024 07:09 AM (IST)

    எதிர்பார்ப்புகள் என்ன?

    Union Budget 2024-25 : புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள், அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 23 Jul 2024 07:06 AM (IST)

    மொரார்ஜி தேசாயின் சாதனை

    Union Budget 2024-25 : தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒரு முறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை அவர் முறியடிக்க உள்ளார்.

  • 23 Jul 2024 07:06 AM (IST)

    7வது முறையாக பட்ஜெட்

    Union Budget 2024-25 : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து வரலாற்று சாதனை படைக்க உள்ளார். இன்று அவர் நிகழ் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதன் மூலம் இந்தச் சாதனையை நிகழ்த்தவுள்ளார்.

  • 23 Jul 2024 07:04 AM (IST)

    நிர்மலா சீதாராமன் பட்ஜெட்

    Nirmala Sitharaman : மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். 18வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கடந்த மாதம் பதவியேற்றது. இதையடுத்து இன்று (ஜூலை 23) 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version