Union Budget 2024: நிதியமைச்சருக்கு பதில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர்கள்.. ஏன் தெரியுமா? - Tamil News | | TV9 Tamil

Union Budget 2024: நிதியமைச்சருக்கு பதில் பட்ஜெட்டை தாக்கல் செய்த பிரதமர்கள்.. ஏன் தெரியுமா?

Updated On: 

22 Jul 2024 00:19 AM

இந்தியாவில் நிதியமைச்சர்கள் மட்டுமில்லாமல் பிரதமர்களுக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். பொதுவாக நிதியமைச்சர்கள் தான் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் பிரதமர்களும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். ஜவஹர்லால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.

1 / 7மிகவும்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் (ஜூலை 23ஆம் தேதி) தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை கடந்த பிப்ரவரியில் சமன் செய்த நிர்மலா சீதாராமன், இப்போது புதிய சாதனை படைக்க உள்ளார்,

2 / 7

இந்தியாவில் நிதியமைச்சர்கள் மட்டுமில்லாமல் பிரதமர்களுக்கு மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். பொதுவாக நிதியமைச்சர்கள் தான் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் பிரதமர்களும் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர். ஜவர்ஹலால் நேரு முதல் மன்மோகன் சிங் வரை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர்.

3 / 7

1958ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி முந்த்ரா மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு அப்போதைய நிதியமைச்சர் டி.டி கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார். நிதியமைச்சர் ராஜினாமா செய்ததால், மத்திய பட்ஜெட்டை அப்போது இருந்த பிரதமர் நேரு தாக்கல் செய்தார். ஏற்கனவே வெளியுறவு மற்றும் அணுசக்தி துறைகளை கையாண்ட நேரு, நிதியமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பையும் ஏற்று 1958 பிப்ரவரி 28 அன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

4 / 7

நேருவுக்குப் பிறகு மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, ​​1967-68 முதல் 1969-70 வரை ஒவ்வொரு ஆண்டும் முழு பட்ஜெட்டையும், 1967-68ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.

5 / 7

இதன்பிறகு, 1970ஆம் ஆண்டு பிரதமராக இருந்த நேருவின் மகளான இந்திரா காந்தி மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1969ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் பதவி விலகியதை அடுத்து, இந்திரா காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்திரா காந்தி தனது பதவிக்காலத்தில் இரண்டு முறை பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

6 / 7

1987-89ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1987ஆம் ஆண்டில் நிதியமைச்சர் பதவியில் இருந்து வி.பி.சிங் ராஜினாமா செய்ததை அடுத்து, ராஜீவ் காந்தி பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ராஜீவ் காந்திக்கு நெருக்கமானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுப்பட்டதாக புகார் எழுந்த நிலையில், வி.பி. சிங் அந்த வழக்குகளை விசாரிக்க தொடங்கினார். இதனால் அவர் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.

7 / 7

பி.வி. நரசிம்ம ராவ் காலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1991ஆம் ஆண்டு முதல் 1996 வரை மன்மோகன் சிங் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 1991ல் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடிக்கு பதில் அளிக்கும் வகையில் பட்ஜெட் அமைந்தது. மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை புதிய பாதைக்கு இழுத்து சென்றது. 1991 இந்திய வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள் என்று சொன்னால் மிகையில்லை.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version