Union Budget 2024: ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்.. ஓ இதான் விஷயமா! - Tamil News | | TV9 Tamil

Union Budget 2024: ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்.. ஓ இதான் விஷயமா!

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.  பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது.  ஒவ்வொரு நிதியாண்டுக்கான பட்ஜெட் எப்போதும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. 

Union Budget 2024: ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்.. ஓ இதான் விஷயமா!

பட்ஜெட்

Updated On: 

09 Jul 2024 18:18 PM

ஜூலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்? மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.  பட்ஜெட் கூட்டத்தொடர் ஜூலை 22ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்கிறது.  ஒவ்வொரு நிதியாண்டுக்கான பட்ஜெட் எப்போதும் பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  தேர்தல் ஆண்டு என்பதால் இந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. வழக்கமாக பிப்ரவரியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் தேர்தல் ஆண்டு வரும்போதெல்லாம் இரண்டு பட்ஜெட்கள் தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்கு முன் பிப்ரவரியில் ஒன்று. அது இடைக்கால பட்ஜெட் என்று அழைக்கப்படுகிறது. இது தேர்தல் முடிவுகள் வரும் வரையிலான காலகட்டம் வரை மட்டுமே. மற்றொன்று ஜூலையில் தாக்கல் செய்யப்படும். தேர்தலுக்குப் பிறகு மீதமுள்ள நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

Also Read: மாதம் ரூ.20,000 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்.. முழு விவரம் இதோ!

எதிர்பார்ப்புகள் என்ன?

யூனியன் பட்ஜெட் அல்லது மத்திய பட்ஜெட் என்பது மத்திய அரசு தயாரிக்கும் பட்ஜெட் ஆகும். இது ஒரு நிதியாண்டுக்கான நிதிக் கணக்கீடு. பட்ஜெட் என்பது அடுத்த நிதியாண்டிற்கான அரசின் வருவாய் மற்றும் செலவினங்களைக் கணக்கிடுவதாகும். ஒரு வருடம் முழுவதும் அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு வருமானம் வரும்? அதே நேரத்தில் எவ்வளவு செலவாகும் என்று கணிக்கப்படுவது ஆகும். தற்போது பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்காக  ஜூலை 22ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் கூட உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 7வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்தவர் என்ற முன்னாள் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாயின் சாதனையை கடந்த பிப்ரவரியில் சமன் செய்த நிர்மலா சீதாராமன், இப்போது புதிய சாதனை படைக்க உள்ளார்.

இந்த பட்ஜெட்டில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் பல சலுகைகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் நிலையை மேம்படுத்தவும் சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள், அரசின் முதலீட்டை அதிகரிப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள், குழந்தைகள், முதியவ்ரகளுக்கான பிரத்யேக திட்டங்களும், புதிய சலுகைகளும் இடம்பெற வாய்ப்புள்ளது.  ஒட்டுமொத்தமாக அடுத்த மாதம் தாக்கலாகும் முழு பட்ஜெட் பல்வேறு துறைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த பட்ஜெட் முக்கியத்துவம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தங்க பத்திரம் உள்ளிட்ட சேமிப்பு பத்திரங்கள்.. எதை கவனிக்கனும்? வட்டி மற்றும் முதலீட்டு விவரம்!

 

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!