ரூ.1,751 கோடி.. பி.எம் விஸ்வகர்மா யோஜனா.. யாருக்கு கடன் கிடைக்கும்?
PM Vishwakarma Yojana: பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் ரூ.1,751 கோடி கடன்கள் அக்.31, 2024வரை அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தின் மக்களவையில் செவ்வாய்க்கிழமை (டிச.10, 2024) தெரிவித்தார்.
பி.எம் விஸ்வகர்மா திட்ட நிதி விடுவிப்பு: பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் அக்டோபர் 31ம் தேதி வரையிலான நிலவரப்படி வங்கிகள் ரூ.1,751 கோடி கடன்களை வழங்கியுள்ளன என்று நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “கிராமப்புறங்களில், மக்கள்தொகையின் அடிப்படையில் எளிதாக கடன் வழங்குவதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வருங்காலங்களில் இந்தக் கடன் திட்டங்கள் இன்னமும் எளிதாக்கப்படும்” என்றார். மேலும், இந்தத் திட்டத்தில், 2023-2024 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை திட்டத்திற்கான நிதிச் செலவு ரூ.13,000 கோடி என்றார்.
ரூ.1751 கோடி அனுமதி
இந்நிலையில், அமைச்சர் பகிர்ந்துள்ள தகவலின்படி பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 2.02 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1,751.20 கோடி.கடன் தொகை அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பிஎம் விஸ்வகர்மா திட்டத்தை மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில், 2023-2024 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரை திட்டத்திற்கான நிதிச் செலவு ரூ.13,000 கோடி என்றார்.
இதையும் படிங்க : வீடு கட்டப் போறீங்களா? லோன் வேணுமா? இந்த 10 வங்கியை நோட் பண்ணுங்க!
டெய்லர் முதல் மீன்பிடி வலை தயாரிப்பு வரை..
இந்தத் திட்டத்தில் கொல்லர், பொற்கொல்லர், குயவர்கள், தச்சர்கள், சிற்பிகள், மீன்பிடி வலை தயாரிப்பு, டெய்லர், துணி துவைக்கும் லாண்டரி தொழிலாளர்கள், முகச்சவரம் தொழிலாளர்கள் போன்ற பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள கைவினைஞர்கள் நிதி உதவி பெற உள்ளனர்.
இந்தத் திட்டம் யோஜனா பாரம்பரிய கைவினைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இவர்களுக்கு தொடக்க பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. அந்த வகையில், திட்டத்தில் ஒவ்வொரு பயனாளியும் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சியில் ஈடுபடும் போது நாளொன்றுக்கு ரூ.500 பயிற்சி உதவித்தொகை பெற தகுதியுடையவர் ஆவார்கள்.
நிதி உதவி எவ்வளவு?
இத்திட்டத்தில் 18 மாத கடனாக ரூ.1 லட்சமும், 30 மாத கடனாக ரூ.2 லட்சமும் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் நிதி உதவி பெற பயனாளி, பதிவு செய்த தேதியில் சம்பந்தப்பட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
சுயவேலைவாய்ப்பு அல்லது தொழில் மேம்பாட்டிற்காக மத்திய அரசு அல்லது மாநில அரசின் கடன் சார்ந்த திட்டங்களின் கீழ் கடன் பெற்றிருக்கக்கூடாது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு
பிரதமர் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் இந்தத் திட்டத்தை கருணாநிதி பெயரில் மாற்றியுள்ளதாக தி.மு.க. மீது பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க : குடித்து விட்டு வாகனம் ஓட்டலாமா? மோட்டார், காப்பீடு விதிகள் என்ன?