5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

FD : வட்டியை அள்ளிக்கொடுக்கும் வங்கிகள்.. FD மற்றும் SB குறித்த விவரங்கள்!

Unity Small Finance Bank FD rates: சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 7.5% வரை வட்டி பெறலாம். அந்த வகையில், ரூ. 1 லட்சம் வரையிலான சேமிப்புக்கு, யூனிட்டி வங்கி ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனியார் துறை வங்கியானது ரூ.1 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி விகிதத்தை இப்போது வழங்குகிறது. ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான மற்றும் ரூ.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7.5% வீதம் வட்டி வழங்கப்படும்.

FD : வட்டியை அள்ளிக்கொடுக்கும் வங்கிகள்.. FD மற்றும் SB குறித்த விவரங்கள்!
வணிகம்
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 25 Jun 2024 15:02 PM

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்: யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி தனது நிலையான வைப்பு மற்றும் சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இதனால், ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு பொது வாடிக்கையாளர்கள் 9.5% வரை வட்டி விகிதங்களைப் பெறுவார்கள். அதே நேரத்தில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு 7.5% வரை வட்டி பெறலாம். அந்த வகையில், ரூ. 1 லட்சம் வரையிலான சேமிப்புக்கு, யூனிட்டி வங்கி ஆண்டுக்கு 6% வட்டி விகிதத்தை வழங்குகிறது. தனியார் துறை வங்கியானது ரூ.1 லட்சத்துக்கு மேல் மற்றும் ரூ.5 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7.25% வட்டி விகிதத்தை இப்போது வழங்குகிறது. ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான மற்றும் ரூ.50 லட்சம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு ஆண்டுக்கு 7.5% வீதமும், ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான இருப்புகளுக்கு 7.75% வீதமும் வழங்குகிறது என வங்கி திங்கள்கிழமை (ஜூன் 24) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேமிப்பு கணக்கு வட்டி விகிதம்

  • ரூ.1 லட்சம் வரை 6%
  • ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை 7.25%
  • ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை 7.50%
  • ரூ.50 லட்சத்துக்கு மேல் 7.75%

யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி எஃப்.டி வட்டி விகிதம்

யூனிட்டி வங்கி 1001 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 9.5% மற்றும் பொது முதலீட்டாளர்களுக்கு ஆண்டுக்கு 9% வட்டி விகிதத்தை தொடர்ந்து வழங்குகிறது. இது வங்கியின் அதிகபட்ச வட்டி விகிதமாகும். குறைந்த வட்டி விகிதத்தில் (165 நாள்கள் முதல் 6 மாதங்கள் வரை) பொது வாடிக்கையாளர்களுக்கு 6.25% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 6.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது. மேலும், 201 நாள்கள் முதல் 364 நாள்கள் வரையிலான எஃப்டிகளில், பொது சந்தாதாரர்களுக்கு ஆண்டுக்கு 8.5% மற்றும் மூத்த குடிமக்களுக்கு 9% வட்டி விகிதத்தை வங்கி வழங்குகிறது.
501 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட்களை முன்பதிவு செய்யும் பொது வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 8.75% மற்றும் மூத்த குடிமக்கள் 9.25% வருமானத்தைப் பெறுவார்கள். தொடர்ந்து, 701 நாட்கள் கொண்ட ஃபிக்ஸட் டெபாசிட்களில், சாதாரண முதலீட்டாளர்கள் ஆண்டுக்கு 8.95% மற்றும் மூத்த குடிமக்கள் 9.45% வரை பெறுவார்கள். மேலும், வங்கியின் அதிகபடியான காலத்திற்கான ஃபிக்ஸட் டெபாசிட்கள் (5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை) பொது வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதத்தையும் மூத்த குடிமக்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டுக்கு 8% வட்டி விகிதத்தையும் அளிக்கும்.

வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதம்

  • 7-14 நாள்கள் 4.50%
  • 15-45 நாள்கள் 4.75%
  • 46-60 நாள்கள் 5.75%
  • 61-90 நாள்கள் 6.00%
  • 91-164 நாள்கள் 6.25%
  • 165 நாள்கள் முதல் 6 மாதம் 6.25%
  • 6 மாதம் முதல் 201 நாள்கள் 8.50%
  • 202 நாள்கள் முதல் 364 நாள்கள் 7.25%
  • ஓராண்டு 7.85%
  • ஓராண்டு ஒரு நாள் 7.85%
  • ஓராண்டு ஒரு நாள் முதல் 500 நாள்கள் 7.85%
  • 501 நாள்கள் 8.75%
  • 502 நாள்கள் முதல் 18 மாதங்கள் 7.85%
  • 18 மாதங்கள் முதல் 700 நாள்கள் 7.90%
  • 7001 நாள்கள் 8.95%
  • 702 நாள்கள் முதல் 1000 நாள்கள் 7.90%
  • 1001 நாள்கள் 9.00%
  • 1002 நாள்கள் முதல் 3 ஆண்டு 8.15%
  • 3 ஆண்டு முதல் 5 ஆண்டு 8.15%
  • 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் 7.50%

இந்த கால டெபாசிட்களில் மூத்தக் குடிமக்களுக்கு 0.50 சதவீதம் வட்டி கூடுதலாக வழங்கப்படும். யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி சென்ட்ரம் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் மூலம் இயக்கப்படுகிறது. ரெசைலியன்ட் இன்னோவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஒரு கூட்டு முதலீட்டாளராக உள்ளது. இது ஒரு டிஜிட்டல் ஃபர்ஸ்ட் வங்கியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer : இந்தக்கட்டுரை திட்டம் தொடர்பான முதற்கட்ட தகவல் மட்டுமே. முதலீட்டின் லாப நஷ்டங்களுக்கு TamilTV9 பொறுப்பேற்காது.

இதையும் படிங்க :SBI வங்கி சொன்ன ஹேப்பி நியூஸ்.. விரைவில் தொடங்கப்படும் 400 புதிய கிளைகள்.. விவரம்!