5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Paytm : புதிய அம்சத்துடன் களமிறங்கிய பேடிஎம்.. இனி அனைத்திற்கும் “PIN” நம்பர் தேவையில்லை!

UPI Lite | இந்தியாவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பல யுபிஐ சேவைகள் அதிக அளவிளான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள  பேடிஎம் செயலி, பேடிஎம் யுபிஐ லைட் சேவை (Paytm UPI Lite Service) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

Paytm : புதிய அம்சத்துடன் களமிறங்கிய பேடிஎம்.. இனி அனைத்திற்கும் “PIN” நம்பர் தேவையில்லை!
பேடிஎம்
vinalin
Vinalin Sweety | Published: 26 Nov 2024 16:44 PM

இந்தியாவில் தற்போது பெரிய வணிக வளாகங்கள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை அனைத்து இடங்களிலும் பரவலாக UPI சேவை பயன்படுத்தப்படுகிறது. மக்களுக்கு யுபிஐ வசதியை எளிதாக்கும் வகையில், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பல யுபிஐ சேவைகளும் செயல்பாட்டில் உள்ளன. இந்த யுபிஐ சேவைகள் மிகவும் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பயன்படுத்த கூடியதாகவும் இருக்கும் நிலையில் அவ்வபோது விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு பேடிஎம் யுபிஐ சேவையில் செய்யப்பட்ட மாற்றங்களின் காரணமாக அதன் பயனர்கள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் பேடிஎம் தற்போது ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த புதிய அம்சம் என்ன, அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Post Office FD : அஞ்சலக நிலையான வைப்பு நிதி திட்டம்.. ரூ.4 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்.. முழு விவரம் இதோ!

யுபிஐ லைட் சேவையை அறிமுகம் செய்த பேடிஎம்

இந்தியாவில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட பல யுபிஐ சேவைகள் அதிக அளவிளான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள  பேடிஎம் செயலி, பேடிஎம் யுபிஐ லைட் சேவை (Paytm UPI Lite Service) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவை மூலம் மக்கள் சிறந்த பயன்களை பெறுவர் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பேடிஎம் செயலியின் இந்த யுபிஐ லைட் சேவையை பயன்படுத்த சில வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன.

பேடிஎம் யுபிஐ லைட் சேவை என்றால் என்ன?

பேடிஎம் என்பது ஒரு யுபிஐ சேவை ஆகும். இதனை பயன்படுத்தி ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். மொபைல் ரீச்சார்ஜ், மின்சார கட்டணம், பள்ளி கட்டணம், கல்லூரி கட்டணம், பொருட்களை வாங்குவதற்கான பில் ஆகிய பரிவர்த்தனைகளை சுலபமாக மேற்கொள்ளலாம். இந்த நிலையில் பேடிஎம் செயலி, பேடிஎம் யுபிஐ லைட் சேவை என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. சிறிய அளவிலான வணிக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இது சிறந்ததாக இருக்கும். பேடிஎம் செயலியின் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்த பின நம்பர் தேவை இல்லை. எவ்வளவு தொகையை அனுப்ப வேண்டுமோ அதை பதிவிட்டு பணத்தை அனுப்பினாலே போதும்.

இதையும் படிங்க : PAN Card : பெயர் முதல் பிறந்த தேதி வரை.. பான் கார்டு ஆன்லைன் திருத்தங்களுக்கு அதிரடி ரூல்ஸ்.. முழு விவரம்!

பேடிஎம் யுபிஐ லைட் சேவை எவ்வாறு பயன்படும்

பேடிஎம் செயலியின் இந்த யுபிஐ லைட் சேவை சிறிய அளவிலான பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தற்போது பெரிய கடைகள் முதல் சிறிய பெட்டிக்கடைகள் வரை யுபிஐ சேவை பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு முறையும் யுபிஐ செயலிக்குள் சென்று பின் நம்பரை உள்ளிட்டு பணத்தை அனுப்ப வேண்டிய தேவை உள்ளது. ஆனால் யுபிஐ லைட் சேவையில் அதற்கான தேவை எதுவும் இல்லை. யுபிஐ செயலியில் இருந்து யுபிஐ லைட் செயலிக்கு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டு அதில் இருந்து பண பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். பேடிஎம்-ன் இந்த யுபிஐ லைட் சேவை வாலட் போல பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : RBI : ரூ.10, 20 நாணயங்கள்.. எச்சரிக்கை விடுத்த ரிசர்வ் வங்கி.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

பண பரிவர்த்தனை வரம்பு

பேடிஎம்-ன் இந்த யுபிஐ லைட் சேவையை பயன்படுத்த சில வரம்புகள் உள்ளன. அதாவது, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.500 என்று வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஒரு நாளைக்கு ரூ.2,000 வரை மட்டுமே இந்த சேவை மூலம் பரிவர்த்தனை செய்ய முடியும். ஒருவேளை பணம் தீர்ந்துவிட்டால் பேடிஎம் செயலியில் இருந்து மீண்டும் ரூ.2,000 டாப் அப் செய்துக்கொள்ளலாம். அனால் இந்த சேவை ஒரு சில வங்கிகளில் மட்டுமே வழங்கப்படுகின்றன. தற்போதைய நிலவரத்தின்படி, ஆக்சிஸ் மற்றும் எஸ் பேங்குகளில் மட்டுமே இந்த பேடிஎம் யுபிஐ லைட் சேவை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News