5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

New UPI Rules : யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு உய்ரவு.. அமலுக்கு வந்த புதிய விதிகள்.. முழு விவரம் இதோ!

NPCI Circle Rules | மருத்துவ கட்டணம், கல்வி கட்ட்டணம் மற்றும் அரசுப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கு யுபிஐ லிமிட் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வரி செலுத்துவோருக்கான லிமிட்டும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவம், கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்தினால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. 

New UPI Rules : யுபிஐ செயலிகள் மூலம் பணம் அனுப்புவதற்கான வரம்பு உய்ரவு.. அமலுக்கு வந்த புதிய விதிகள்.. முழு விவரம் இதோ!
மாதிரி புகைப்படம் (Photo Credit : Witthaya Prasongsin/Moment/Getty Images)
vinalin
Vinalin Sweety | Updated On: 16 Sep 2024 13:30 PM

ஆன்லைன் பண பரிவர்த்தனை : யுபிஐ செயலிகளை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்வதற்கான லிமிட்டை இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) உயர்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி யுபிஐ லிமிட் மாற்றி அமைக்கப்பட உள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், தற்போது அந்த புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய விதிகளின்படி, ஆன்லைன் பண பரிவர்த்தனை லிமிட் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது, என்ன என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : Amazon Great Indian Festival : அசத்தல் தள்ளுபடிகளுடன் வரப்போகும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்.. எப்போது தெரியுமா?

கடைகோடி கிராமங்கள் வரை சென்றடைந்த யுபிஐ

இந்தியாவில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ பண பரிவர்த்தனை செயலிகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. சிறிய காய்கறி கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவை உள்ளதால் பெரும்பாலான மக்கள் யுபிஐ சேவைக்கு மாறிவிட்டனர். சொல்லபோனால் இப்போதெல்லாம் யாரும் கையில் காசு வைத்துக்கொள்வதில்லை. எல்லாமே யுபிஐ தான். மொபைல் போன்களின் வளர்ச்சியால் யுபிஐ இந்தியாவின் கடைகோடி கிராமங்கள் வரை சென்றடைந்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் இதனை மேலும் விரிவடைய செய்ய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Fixed Deposit : 5 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி திட்டம்.. அதிக வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

யுபிஐ-ல் பணம் செலுத்துவதற்கான லிமிட்

யுபிஐ செயலிகள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் அனைவரும் அதனை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு ஏராளமான மக்கள் பயன்படுத்துவதால் யுபிஐ செயலிகளில் பணம் அனுப்புவதில் சில நிபந்தனைகள் உள்ளது. யுபிஐ செயலி மூலம் பணம் அனுப்பும்போது கட்டணம் ஏதும் விதிக்கப்படாது என்பதால் பணம் அனுப்புவதற்கான லிமிட் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகைக்கு மேல் யுபிஐ-ல் பண பரிவர்த்தை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ATM Card : பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!

யுபிஐ பண வரிவர்த்தனை லிமிட்டை மாற்றி அமைத்த ஆர்பிஐ

அதாவது, மருத்துவ கட்டணம், கல்வி கட்ட்டணம் மற்றும் அரசுப் பத்திரங்கள் ஆகியவற்றுக்கு யுபிஐ லிமிட் மாற்றியமைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது வரி செலுத்துவோருக்கான லிமிட்டும் மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவம், கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றிற்கு யுபிஐ செயலி மூலம் பணம் செலுத்தினால் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மட்டுமே செலுத்த முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Fixed Deposit : 3 ஆண்டுகளுக்கான நிலையான வைப்புநிதி.. 7.15% வரை வட்டி வழங்கும் பொதுத் துறை வங்கிகள்!

முன்னதாக ரூ.1 லட்சமாக இருந்த லிமிட் தற்போது ரூ.5 லட்சமக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய லிமிட்டை ஏற்கனவே இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அமலுக்கு கொண்டுவந்துள்ள நிலையில் தற்போது வரி செலுத்துபவர்களுக்கான லிமிட்டும் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதவாது இந்த புதிய விதி மூலம்  வரி செலுத்துபவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் வரையிலான பண பரிவர்த்தனைகளுக்கு எந்த வித வரியும் பிடித்தம் செய்யப்படாது. இந்த அனைத்து திருத்தப்பட்ட விதிகளும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வேறு என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

NPCI-ன் சர்க்கிள் விதிகள் ஒரு வங்கி கணக்கிற்கு ஒரு யுபிஐ கணக்குகளுக்கான விதியை மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய விதிகள் மூலம் ஒரே ஒரு வங்கி கணக்கு மூலம் குறைந்தபட்சம் 2 யுபிஐ கணக்குகளும் அதிகபட்சமாக 5 யுபிஐ கணக்குகளும் பயன்படுத்தலாம். திருத்தம் செய்யப்பட்ட இந்த புதிய விதிகள் கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட அனைத்து யுபிஐ செயலிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News