UPI Transaction : ஒரே ஆண்டில் 49% உயர்ந்த UPI பண பரிவர்த்தனை.. டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா! - Tamil News | UPI transaction rate rose nearly 49 percent in June 2024 compared to 2023 | TV9 Tamil

UPI Transaction : ஒரே ஆண்டில் 49% உயர்ந்த UPI பண பரிவர்த்தனை.. டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா!

Updated On: 

02 Jul 2024 11:07 AM

NCPI report | இந்தியாவில் UPI மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனையின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக NCPI தெரிவித்துள்ளது. அதன் சமீபத்திய அறிக்கையின்படி, UPI பரிவர்த்தனைகள் 49% சதவீதம் உயர்ந்து 13.9 பில்லியனாக உள்ளது. மே மாதத்தில் பரிவர்த்தனை மதிப்பு 36% உயர்ந்து 20.1 ட்ரில்லியனாக இருந்தது. இதேபோல UPI பரிவர்த்தனைகளின் மதிப்பு 37% உயர்ந்து 20.4 ட்ரில்லியனாக இருந்தது.

UPI Transaction : ஒரே ஆண்டில் 49% உயர்ந்த UPI பண பரிவர்த்தனை.. டிஜிட்டல் பரிவர்த்தனையில் முன்னிலை வகிக்கும் இந்தியா!

மாதிரி புகைப்படம்

Follow Us On

யுபிஐ பண பரிவர்த்தனை : யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (UPI) தளம் மூலம் செய்யப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிரடியாக உயர்ந்துள்ளது. இது குறித்து NCPI வெளியிட்ட அறிக்கையின் தரவுகளின்படி, UPI பண பரிவர்த்தனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 49% உயர்ந்து 13.9 பில்லியனாக உள்ளது. ஜூன் மாதத்தில் குறைந்த நாட்கள் இருந்ததன் காரணமாக மே மாதத்தின் 14 மில்லியனுக்கும் குறைவாகவே உள்ளது. அதன்படி கடந்த மே மாதத்தில் பண பரிவர்த்தனை மதிப்பு 36% உயர்ந்து 20.1 ட்ரில்லியனாக இருந்தது. அதேபோல UPI பண பரிவர்த்தனை 37% உயர்ந்து 20.4 ட்ரில்லியனாக இருந்தது. NCPI-ன் அறிக்கையின்படி, ஜூன் மாதத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு 463 மில்லியன் பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.66,903 கோடி ஆகும்.

பிற முக்கிய அளவீடுகளின் அடிப்படையில், ஆதார் இயக்கபட்ட கட்டண முறைகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4% அதிகரித்து 100 மில்லியனாக இருந்தது. அதுவே ஜுன் மாதத்தில் பரிவர்த்தனை தொகை 5% சரிந்து ரூ.25,122 கோடியாக இருந்தது. இந்நிலையில் சராசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 3.3 மில்லியம் மற்றும் சராசரி தினசரி பரிவர்த்தனை தொகை ரூ.837 கோடியாகவும் உள்ளது.

உடனடி மொபைல் கட்டண சேவைகள் (IMPS) கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10% உயர்ந்து 517 மில்லியனாக உள்ளது. IMPS மீதான பரிவர்த்தனைகளின் மதிப்பு 15% உயர்ந்து ரூ.5.8 ட்ரில்லியனாக உள்ளது. இதேபோல சராசரி தினசரி பரிவர்த்தனை எண்ணிக்கை 17.2 மில்லியன் மற்றும் சராசரி தினசரி பரிவர்த்தனை தொகை ரூ.19,260 கோடியாக உள்ளது. NETC FASTag மாதாந்திர பரிவர்த்தனை ஜூன் மாதத்தில், கடந்த ஆண்டை விட 6% உயர்ந்து 334 மில்லியனாக உயர்ந்துள்ளது. பரிவர்த்தனைகளின் மதிப்பு 11% உயர்ந்து ரூ. 5,780 கோடியாக உள்ளது.

UPI பரிவர்த்தனைகளின் வளர்ச்சி UPI-ல் Rupay கிரெடிட் கார்டு மற்றும் NCPI இன்டர்நேஷனல் பேமெண்ட் மூலம் வெளிநாடுகளில் UPI தொடங்கப்பட்டதன் மூலம் பரவலாக பயன்படுத்தப்பட தொடங்கியது. இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், உலகின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் கிட்டத்தட்ட சுமார் 46% இந்தியா பங்கு வகிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க : இப்படி முதலீடு பண்ணுங்க: மாதம் ரூ.20 ஆயிரம், ரூ.12 லட்சமாக உயரும்!

2024, ஜனவரி மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 452 மில்லியனுக்கு அதிகமான மக்கள் UPI பயணாளர்களாக உள்ளனர். அதுமட்டுமன்றி UPI சேவையை பயன்படுத்தும் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version